கொரோனா காலத்தில் ஊழியர்களுக்கு ஜாக்பாட்... ₹ 1.12 லட்சம் போனஸ் அறிவித்த மைக்ரோசாப்ட் நிறுவனம்

அலுவலகம் (Rajdeep Ray / Shutterstock.com)

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஊழியர்களுக்கு 1.12 லட்ச ரூபாய் போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.

 • Share this:
  உலக நாடுகள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துவருகின்றன. 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகளாக நீடித்துவருகிறது. கொரோனா முதல் அலை முடிந்து எல்லா நாடுகளும் தங்களது பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கிய உடனே இரண்டு அலை கோரத் தாண்டவம் ஆடியது. தற்போது இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்துவருகிறது. எனவே, சர்வதேச நாடுகளும் இயல்பு நிலையை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கின்றன.

  இருப்பினும், மூன்றாவது அலையின் அச்சம் இல்லாமல் இல்லை. இதற்கிடையில், கொரோனாவால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு உதவ ஒவ்வொரு நாட்டின் அரசுகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன. ஒவ்வொரு நாடுகளும் பொதுமக்களுக்கு நிதியுதவி, கடனுதவி, வட்டியில்லா கடன் போன்ற நடவடிக்கைகளின் மூலம் பொருளாதாரத்தை முன்னேற்ற முயன்றுவருகின்றன. அதேபோல, கார்ப்ரேட் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்துவருகின்றன.  கொரோனாவால் உயிரிழப்பவர்களுக்கும் பாதிக்கப்படுபவர்களுக்கும் நிதியுதவி வழங்கி பல நிறுவனங்கள் உதவுகின்றன.

  அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது அனைத்து ஊழியர்களுக்கு 1,12,000 ரூபாய் போனஸாக வழங்குகிறது. அதாவது அனைத்து ஊழியர்களுக்கும் 1,500 அமெரிக்க டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளது.

  இது ஊழியர்களிடையே பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பிருந்து கார்ப்ரேட் துணைத் தலைவர் பதவிக்கு கீழ் உள்ள அனைத்து மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மைக்ரோசாப்டின் பகுதி நேர ஊழியர்களுக்கும் இந்தச் சலுகைகள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உலக அளவில் 1,75,000-க்கும் மேற்பட்டவர்கள் ஊழியர்களாக உள்ளனர். அத்தனை பேரும் இந்த போனஸால் பயனடைவார்கள். அதற்காக, 200 மில்லியன் டாலரை மைக்ரோசாப்ட் நிறுவனம் செலவிட உள்ளது.

  இருப்பினும், மைக்ரோசாப்டின் துணை நிறுனங்களான லிங்க்ட்இன், கிட்ஹப், ஷெனிமேக்ஸ் ஆகிய நிறுவன ஊழியர்களுக்கு இந்த போனஸ் கிடையாது.
  Published by:Karthick S
  First published: