Home » News » Technology » MICROMAX RE ENTERS SMARTPHONE MARKET VJR

ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் மைக்ரோமேக்ஸ்... பட்ஜெட் விலையில் புதிய மொபைல்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை 2 புதிய மாடல் செல்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் மைக்ரோமேக்ஸ்... பட்ஜெட் விலையில் புதிய மொபைல்
Micromax
  • Share this:
பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் களமிறங்கியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடம்பிடித்திருந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சீன செல்போன் கம்பெணிகளின் வருகையால், போட்டியில் இருந்து மெல்ல மெல்ல விலகியது. இந்நிலையில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சீன செல்போன்களை மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை 2 புதிய மாடல் செல்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. IN note1 மற்றும் IN 1b என்ற இருமாடல்களையும் அறிமுகப்படுத்தி பேசிய நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா, இந்தியாவில் 7 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலான செல்போன்களே 90 விழுக்காடு உள்ளது என்றார்.


இந்த விலையில் தங்கள் செல்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், விரைவில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போன்கள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
First published: November 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories