Home /News /technology /

பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் இன் 2சி அறிமுகம் - என்ன விலை, என்னென்ன அம்சங்கள்.?

பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் இன் 2சி அறிமுகம் - என்ன விலை, என்னென்ன அம்சங்கள்.?

micromax in 2c

micromax in 2c

Micromax in 2c | டூயல் சிம் ஆதரவு (நானோ) கொண்ட மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஆனது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இது 6.52 இன்ச் அளவிலான எச்டி+ (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 263பிபிஐ பிக்சல் டென்சிட்டி உடன் பேக் செய்கிறது.

மேலும் படிக்கவும் ...
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக மைக்ரோமேக்ஸ் இன் 2சி மாடல் இந்தியாவில் கடந்த மாதம் ஆம் தேதி அறிமுகமானது. இந்த புதிய மைக்ரோமேக்ஸ் மாடல் ஆனது கடந்த ஆண்டு அறிமுகமான இன் 2பி மாடலைப் போலவே உள்ளது.

வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​டிஸ்ப்ளே நாட்ச் வடிவமைப்பு, டூயல் ரியர் கேமரா செட்டப், ஆக்டா-கோர் யுனிசெக் டி610 எஸ்ஓசி, இன்பில்ட் ஸ்டோரேஜை விரிவுபடுத்துவதற்கான பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 16 மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங் அல்லது 50 மணிநேர டாக் டைமை வழங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ள 5,000எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ள மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஆனது இன்ஃபினிக்ஸ் ஹாட் 11 2022, ரியல்மி சி31 மற்றும் போக்கோ சி3 போன்ற மாடல்களுக்கு எதிராக கடுமையாக போட்டியிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

விலை மற்றும் விற்பனை:

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.8,499 என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இது ரூ.7,499 க்கு வாங்க கிடைக்கும். இந்த சலுகை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன், ப்ரவுன் மற்றும் சில்வர் வண்ணங்களில் பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளம் வழியாக மே 1 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கிறது.



அம்சங்கள்:

டூயல் சிம் ஆதரவு (நானோ) கொண்ட மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஆனது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இது 6.52 இன்ச் அளவிலான எச்டி+ (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 263பிபிஐ பிக்சல் டென்சிட்டி உடன் பேக் செய்கிறது. மேலும் இதில் 3ஜிபி ரேம் உடன்,ஆக்டா-கோர் யுனிசெக் டி610 எஸ்ஓசி-யும் உள்ளது. அதாவது இதன் டிஸ்ப்ளே மற்றும் எஸ்ஓசி ஆகியவைகள் கடந்த ஆண்டு அறிமுகமான இன் 2பி மாடலை போலவே உள்ளது.

Also Read : இந்தியாவில் வெளியாக இருக்கும் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள்..

கேமராக்களை பொறுத்தவரை, இன் 2சி மாடல் ஆனது 8 மெகாபிக்சல் மெயின் சென்சார் + ஒரு பிரத்யேக டெப்த் சென்சார் உடனான டூயல் ரியர் கேமரா செட்டப்பை பெற்றுள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் 2பி மாடலில் 13எம்பி மேட்டின் சென்சார் இடம்பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது. செல்பீ கேமராவை பொறுத்தவரை, இன் 2சி மாடலில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் இடம்பெற்றுள்ளது. இதன் கேமரா அமைப்பானது ஃபேஸ் பியூட்டி, நைட் மோட் மற்றும் போர்ட்ரெய்ட் மோட் உள்ளிட்ட அம்சங்களை ஆதரிக்கிறது.

Also Read : குறைந்த விலையில் விற்கப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட IPhone13..

32ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜிஎல்டி, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வி5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவைகளை வழங்குகிறது. இது 10W ஸ்டாண்டர்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.
Published by:Selvi M
First published:

Tags: Smartphone, Technology

அடுத்த செய்தி