5,000mAh பேட்டரி, டூயல் ரியர் கேமராக்களுடன் அறிமுகமான மைக்ரோமேக்ஸின் புதிய ஸ்மார்ட் ஃபோன் - முழு விவரம்!

மைக்ரோமேக்ஸின் புதிய ஸ்மார்ட் ஃபோன்

4 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.7,999, 6 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.8,999 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது

  • Share this:
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது பட்ஜெட் கேட்டகரி ஸ்மார்ட் ஃபோன் ரேஞ்சை விரிவுபடுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மைக்ரோமேக்ஸ் இன் 2பி (Micromax In 2b) என்ற பட்ஜெட் ரேஞ்ச் ஸ்மார்ட் ஃபோனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த தொலைபேசி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோமேக்ஸ் இன் 1பி (Micromax In 1b) தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த Micromax In 2b ஸ்மார்ட் ஃபோன் 6.52-இன்ச் எச்டி+ வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே போன்ற அம்சங்களுடன் வருகிறது. மேலும் மைக்ரோமேக்ஸின் ஸ்மார்ட் ஃபோன் யுனிசாக் டி 610 எஸ்ஓசி (Unisoc T610 SoC) ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. வேகமான CPU மற்றும் GPU திறன்களின் காரணமாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது சமீபத்திய ‘மேட் இன் இந்தியா’ தொலைபேசியை “நோ ஹேங் போன்” (no hang phone) என்று கூறி வருகிறது. தவிர மைக்ரோமேக்ஸ் 2 புதிய மலிவு ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (True Wireless Stereo) இயர்பட்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அவை முறையே ஏர்ஃபங்க் 1 மற்றும் ஏர்ஃபங்க் 1 ப்ரோ (AirFunk 1 and AirFunk 1 Pro). இதனிடையே 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வந்துள்ள Micromax In 2b ஸ்மார்ட் ஃபோன் பின்புறம் பொருத்தப்பட்ட ரியர் மவுன்ட்டட் ஃபிங்கர் ப்ரின்ட் சென்சாரை கொண்டுள்ளது. மேலும் இந்த ஃபோனின் பின்பக்கத்தில் செவ்வக வடிவ மாடியூலுக்குள் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது.



Micromax In 2b ஃபோனின் வலது விளிம்பில் வால்யூம் பட்டன்ஸ மற்றும் பவர் பட்டன் அமைந்திருக்கிறது. Micromax In 2b ஸ்மார்ட் ஃபோன் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ஆகிய 2 ரேம் மாடல்களில் வருகிறது. இந்த இரு வேரியண்ட்களும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கேப்பாசிட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

 



 

இதில் 4 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.7,999, 6 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.8,999 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நீலம், கருப்பு, பச்சை உள்ளிட்ட நிறங்களில் ஈ-காமர்ஸ் வெப்சைட்டான பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது Micromax In 2b. 1600x620 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 400 நிட்களின் பீக் பிரைட்னஸுடன் இதன் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

துவக்கத்தில் குறிப்பிட்டது போல், யுனிசாக் டி 610 எஸ்ஓசி ஆக்டா கோர் ப்ராசஸர் கொண்டு ஆண்ட்ராய்டு 11 ஆப்ரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது. Micromax In 2b அதன் முந்தைய Micromax In 1b -ஐ விட சுமார் 70% சிறந்த செயல்திறனை வழங்கும் என்று மைக்ரோமேக்ஸ் குறிப்பிட்டுள்ளது.



இந்த ஸ்மார்ட் ஃபோன் நோ-க்ளான்ஸ், நோ ப்ரீ-லோட், நோ-ப்ளோட்வேர் மற்றும் நோ ஹேங் (no-glance, no pre-load, no-bloatware, and a no-hang experience) அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கூறுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் ஃபோனில் 3-இன் -1 பிரத்யேக சிம் ஸ்லாட் உள்ளது. இது 5GHz Wi-Fi மற்றும் VoWiFi, டூயல் VoLTE மற்றும் ப்ளூடூத் 5.0 ஆகியவற்றுக்கான கனெக்ட்டிவிட்டியை சப்போர்ட் செய்கிறது.

 



 

இந்த ஃபோனால் சுமார் 150 மணிநேரம் மியூசிக் பிளேபேக், 15 மணிநேரம் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் 50 மணிநேரம் டாக் டைம் வழங்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. இது10W டைப்-சி சார்ஜரை கொண்டுள்ளது.



இதன் ரியர் கேமரா செட்டப் f/1.8 aperture கொண்ட 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா மற்றும் மைக்ரோமேக்ஸ் In 1b போன்ற 2 மெகாபிக்சல் AI கேமராவை உள்ளடக்கியுள்ளது. இதன் முன் பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஏற்ப 5 மெகாபிக்சல் சென்சார் கேமரா இடம் பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: