எம்ஐ நோட்புக் ப்ரோ 15 OLED டிஸ்ப்ளே, எம்ஐ நோட்புக் ப்ரோ 14 120Hz டிஸ்ப்ளே லேப்டாப் மாடல்கள் செவ்வாய்கிழமை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு லேப்டாக்களும் 11வது ஜெனரல் இன்டெல் டைகர் லேக் சிபியுக்கள் (Tiger Lake CPUs) மற்றும் என்விடியா ஜியிபோர்ஸ் (Nvidia GeForce) கிராபிக்ஸ் மூலம் இயக்கப்படுகின்றன.
இரண்டு லேப்டாக்களுக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு என்னவென்றால், எம்ஐ நோட்புக் ப்ரோ 15 ஓஎல்இடி (OLED) டிஸ்ப்ளேவுடனும், எம்ஐ நோட்புக் ப்ரோ 14 எல்சிடி டிஸ்ப்ளேவுடன் (high refresh rate LCD display) வருகிறது. மேலும் இந்த இரண்டு லேப்டாக்களும் பல்வேறு அம்சங்களுடனும், தண்டர்போல்ட் 4 போர்ட்களுடன் வருகின்றன.
லேப்டாக்களின் விலை :
எம்ஐ நோட்புக் ப்ரோ 15 தோராயமாக ரூ. 72,900 என்ற விலையில் தொடங்குகிறது. இந்த லேப்டாப் 16 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் இன்டெல் ஐரிஸ் எக்ஸ் கிராபிக்ஸ், கோர் ஐ5 சிபியு-வுடன் கிடைக்கிறது. என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 450 ஜிபியூ (Nvidia GeForce MX450 GPU) ரூ.78,500க்கு கிடைக்கிறது. கோர் i7 க்கு மேம்படுத்தும் அம்சம் உள்ள லேப்டாப் ரூ .90,000 ஆகும்.
எம்ஐ நோட்புக் ப்ரோ 14 ரூ. 59,400ல் தொடங்குகிறது, இதில் ரூ. 67,300க்கு மற்றொரு மாடலும் கிடைக்கிறது. இரண்டும் லேப்டாப் மாடல்களுமே சில்வர் நிறத்தில் கிடைக்கிறது.
முன்பதிவு செய்யாதவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் விநியோகம் செய்யப்படவுள்ளது, எம்ஐ நோட்புக் ப்ரோ 14 லேப்டாப்பை ஏப்ரல் 26 முதல் முன்பதிவு செய்யலாம், மே 1 முதல் விற்பனை தொடங்குகிறது.
லேப்டாக்களின் சிறப்பம்சங்கள் :
இரண்டு லேப்டாப் மாடல்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சிறப்பம்சங்களை பெற்றுள்ளன.
எம்ஐ நோட்புக் ப்ரோ 15-ல் 15.6 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே, 3,456x2,160 பிக்சல் டிஸ்பிளே உள்ளது. 261 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 400 நைட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 93 சதவீதம் ஸ்க்ரீன் உள்ளது. இது ஒரு நிலையான 60Hz ரெப்ரஷ் ரேட், புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது, 100 சதவீதம் sRGB மற்றும் 100 சதவீதம் டி.சி.ஐ-பி 3 வண்ண வரம்பு, TUV ரைன்லேண்ட் நீல ஒளி சர்டிபிகேட்டையும் கொண்டுள்ளது.
எம்ஐ நோட்புக் ப்ரோ 14-ல் 14 இன்ச் 2K (2,560x1,600 pixels) டிஸ்பிளே உள்ளது. 120Hz ரெப்ரஷ் ரேட், 88 சதவீதம் ஸ்க்ரீன், 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 261 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 300 நைட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. 100 சதவீதம் sRGB மற்றும் TUV ரைன்லேண்ட் நீல ஒளி சர்டிபிகேட்டையும் கொண்டுள்ளது.
Also read... பைபர் திட்டங்களை நிறுத்திய பி.எஸ்.என்.எல் - ஏன் தெரியுமா?
இரண்டு லேப்டாப் மாடல்களும் இன்டெல் 11வது ஜெனரல் கோர் i7-11370H CPU மற்றும் என்விடியா ஜியிபோர்ஸ் MX450 GPU பொருத்தப்பட்டிருக்கும். அவை 16 ஜிபி டிடிஆர் 4 ரேம் 3,200 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 512 ஜிபி பிசிஐஇ எஸ்எஸ்டியுடன் சேமிப்பு அம்சத்தை கொண்டுள்ளது. மேலும் வைஃபை 6, புளூடூத் வி 5.1, இரண்டு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள், தண்டர்போல்ட் 4 போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் ஆகியவையும் அடங்கும். எம்ஐ நோட்புக் ப்ரோ 15 348.4x237.5x16.3 மிமீ என்ற அளவிலும், 1.8 கிலோ எடையுள்ளதாக இருக்கும். எம்ஐ நோட்புக் ப்ரோ 14 315.6 x 220.4 x 15.9 மிமீ என்ற அளவிலும், 1.5 கிலோ எடையையும் கொண்டுள்ளது.
பேட்டரி திறனைப் பொறுத்தவரை, எம்ஐ நோட்புக் புரோ 15 66 Whr பேட்டரியைக் கொண்டுள்ளது, இது வேகமாக சார்ஜ் செய்வதை ஆதரிக்கிறது. எனவே நீங்கள் 35 நிமிடங்களில் 50 சதவீதம் வரை உங்கள் லேப்டாப்பை சார்ஜ் செய்ய முடியும்.. இதேபோல எம்ஐ நோட்புக் புரோ 14 56 Whr பேட்டரியைக் கொண்டுள்ளது, இதனை 37 நிமிடங்களில் 50 சதவீதமாக சார்ஜ் செய்ய முடியும். ஆடியோ அம்சத்த பொறுத்தவரை இரண்டு 2W ஸ்பீக்கர்கள் டி.டி.எஸ் ஆடியோ அம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.