108 மெகாபிக்சல் உடனான பென்டா கேமிரா... வருகிறது Mi நோட் 10..!

108+20+12 மெகாபிக்சல் கொண்ட ரியர் கேமிரா, 5170mAh பேட்டரி ஆகியன Mi நோட் 10-ன் சிறப்பு அம்சங்களாக உள்ளன.

108 மெகாபிக்சல் உடனான பென்டா கேமிரா... வருகிறது Mi நோட் 10..!
Mi நோட் 10
  • News18
  • Last Updated: November 4, 2019, 7:16 PM IST
  • Share this:
ஜியோமி நிறுவனம் வருகிற நவம்பர் 6-ம் தேதி Mi நோட் 10 ஸ்மார்ட்போனை சந்தையில் களம் இறக்குகிறது.

சீன நிறுவனமான ஜியோமி Mi நோட் 10 போனை ஸ்பெயினில் வெளியிடுகிறது. 108 மெகாபிக்சல் கொண்ட பென்டா கேமிரா தொழில்நுட்பம் என்பது ஜியோமி வாடிக்கையாளர்களைக் கவரும் அம்சமாகவே உள்ளது. Mi நோட் சீரிஸின் கீழ் கடைசியாக Mi நோட் 3 போன் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது.

அதன் பின்னர் தற்போதுதான் Mi நோட் சீரிஸின் கீழ் Mi நோட் 10 வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜியோமி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நவம்பர் 5-ம் தேதி Mi CC9 ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டும் வெளியிடப்பட உள்ளது.


6.47 இன்ச் டிஸ்ப்ளே, க்வால்காம் ஸ்நாப்ட்ராகன் 730G, 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா, 108+20+12 மெகாபிக்சல் கொண்ட ரியர் கேமிரா, 5170mAh பேட்டரி ஆகியன Mi நோட் 10-ன் சிறப்பு அம்சங்களாக உள்ளன.

மேலும் பார்க்க: இனி அமேசான் மூலமாகவும் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யலாம்..!

கண்ணாடி அணிவதற்கும் கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கும் உள்ள வித்தியாசம்?
First published: November 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்