Home /News /technology /

Xiaomi & Redmi போன்கள், லேப்டாப்களுக்கு செம்ம ஆபர்கள்.!

Xiaomi & Redmi போன்கள், லேப்டாப்களுக்கு செம்ம ஆபர்கள்.!

MI Fan Festival 2022

MI Fan Festival 2022

Mi Fan Festival 2022 | ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு, வாடிக்கையாளர்கள் 'ஜாக்பாட் டீல்ஸ்' மூலம் தங்கள் அதிர்ஷ்டத்தை பரிசோதிக்கலாம். இதன் வழியாக சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி மாடலை ரூ.8,999 க்கும், ரெட்மி ஸ்மார்ட் டிவி-ஐ ரூ. 6,999 க்கும், எம்ஐ ரோபோட் வேக்வம் - மாப் பி மாடலை ரூ.9,999 க்கும் வாங்கலாம்.

மேலும் படிக்கவும் ...
சியோமி நிறுவனம் தனது வருடாந்திர விற்பனை நிகழ்வான எம்ஐ ஃபேன் பெஸ்டிவல் 2022-வை அறிவித்தது. இதன் கீழ், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை பல வகையான சலுகைகள் கிடைக்கிறது. இது பிரத்தியேகமாக எம்ஐ.காம் (Mi.com) மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்களில் வழியாக மட்டுமே அணுக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு வார சலுகை விற்பனையின் போது, ​​வாடிக்கையாளர்கள் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் மற்றும் கூப்பன்களை வெல்லும் வாய்ப்பும் உள்ளது. எம்ஐ ஸ்டோர் ஆப் வழியாக ஷாப்பிங் செய்பவர்கள் ரூ.15,000 வரை கூப்பன்கள், இரண்டு தங்க நாணயங்கள் (2 கிராம்), ரூ.80,000 மதிப்புள்ள கிஃப்ட் ஹேம்பர்கள், ரெட்மி எக்ஸ்42 டிவி மற்றும் 100 சதவீத கேஷ்பேக் ஆகியவற்றை வெல்லலாம்.

ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு, வாடிக்கையாளர்கள் 'ஜாக்பாட் டீல்ஸ்' மூலம் தங்கள் அதிர்ஷ்டத்தை பரிசோதிக்கலாம். இதன் வழியாக சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி மாடலை ரூ.8,999 க்கும், ரெட்மி ஸ்மார்ட் டிவி-ஐ ரூ. 6,999 க்கும், எம்ஐ ரோபோட் வேக்வம் - மாப் பி மாடலை ரூ.9,999 க்கும் வாங்கலாம்.

மேலும் தினமும் மதியம் 12 மணிக்கு ஆடியோ தயாரிப்புகள், பவர் பேங்க்கள், டிரிம்மர்கள் மற்றும் பிற தயாரிப்புகளுக்கு நம்ப முடியாத சலுகைகள் வழங்கப்படும்.



ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்கு, வாடிக்கையாளர்கள் X99 விற்பனையில் பங்குகொள்ளலாம். இதன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் ரூ.99, ரூ.299, ரூ.499 மற்றும் ரூ.999க்கு வாங்குவதற்கு கிடைக்கும். மேலும் மாலை 6 மணிக்கு 'ஹாஃப் ப்ரைஸ் ஸ்டோர்' வழியாக வாடிக்கையாளர்களுக்கு தினமும் 50 சதவீத தள்ளுபடியின் கீழ் பொருட்கள் வாங்க கிடைக்கும்.

கூடுதல் தள்ளுபடிகளை பெறவும் ‘பிக் அண்ட் சூஸ்' (Pick N’Choose) சலுகையை பயன்படுத்தலாம். இந்த எம்ஐ ஃபேன் பெஸ்டிவல் 2022 இன் கீழ் கிடைக்கும் பிரபலமான சில சலுகைகளை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.

Also Read : ஸ்மார்ட் போன் தண்ணீருக்குள் தவறி விழுந்தால்... முதலில் இதை செய்யுங்கள்!

என்னென்ன ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.?

* ரெட்மி 10
* ரெட்மி நோட் 11
* ரெட்மி 9ஐ ஸ்போர்ட்
* ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் (6ஜிபி+128ஜிபி)

என்னென்ன சியோமி ஸ்மார்ட்போன்கள் மீது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.?

* சியோமி 11ஐ
* சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ்
* சியோமி 11ஐ லைட்



என்னென்ன ரெட்மி, எம்ஐ லேப்டாப்கள் மீது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.?

* எம்ஐ நோட்புக் ப்ரோ (ஐ5 / 8ஜிபி /512ஜிபி)
* எம்ஐ நோட்புக் ப்ரோ ஐ5/ 16ஜிபி / 512ஜிபி)
* எம்ஐ நோட்புக் ப்ரோ (ஐ5 8 ஜிபி / 512ஜிபி
* எம்ஐ நோட்புக் அல்ட்ரா (ஐ5 / 16ஜிபி /512ஜிபி)
* ரெட்மிபுக்15 (ஐ3 / 8ஜிபி / 256 ஜிபி)
* ரெட்மிபுக்15 ப்ரோ (ஐ5 / 8ஜிபி / 512 ஜிபி)

கவனிக்க வேண்டிய பிற சாதனங்கள்:

* எம்ஐ ரோபோட் வேக்வம்-மாப் பி
* 10000எம்ஏஎச் பவர் பேங்க் 3i 999 899
* ரெட்மி சோனிக்பாஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ்
* எம்ஐ ஸ்மார்ட் பேண்ட் 6
* எம்ஐ பியர்ட் டிரிம்மர் 1சி

Also Read : Flipkart-ல் இவ்ளோ குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் - முழு விவரம்

குறிப்பாக ரெட்மி மற்றும் சியோமி ஸ்மார்ட்போன்களுக்கான விலைகளில் சிலவற்றிற்கு எஸ்பிஐ வங்கி சலுகைகளும் அணுக கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அதாவது ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் மீதான கூடுதல் தள்ளுபடியைப் பெறுவதற்கு நீங்கள் எஸ்பிஐ வங்கியின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது வங்கி சலுகையுடன் ரூ.18,999 க்கு கிடைக்கிறது. ஆனால் இதன் அசல் விலை ரூ.20,999 ஆக இருக்கும்.
Published by:Selvi M
First published:

Tags: Mi, Technology, Xiaomi

அடுத்த செய்தி