இனி காற்றிலேயே சார்ஜ் செய்யலாம்: Mi ஏர் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த ஜியோமி!

Mi ஏர் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த ஜியோமி!

நீங்கள் கேம் விளையாடி கொண்டிருக்கோம் போதோ, நடந்து செல்லும் போதோ எவ்வித இணைப்பும் இல்லாமலே உங்கள் சாதனங்களை Mi ஏர் சார்ஜ் தொழில்நுட்பம் மூலம் சார்ஜ் செய்யலாம் என குறிப்பிட்டுள்ளது.

  • Share this:
Mi ஏர் சார்ஜ் தொழில்நுட்பத்தை ஜியோமி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த சார்ஜிங் தொழில்நுட்பம் உண்மையாகவே வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. அதாவது Mi ஏர் சார்ஜ் தொழில்நுட்பத்தில் சார்ஜிங் கேபிள் அல்லது ஸ்டாண்ட் இல்லாமலேயே உங்களது மின் சாதனங்களை சார்ஜ் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல சாதனங்களை சார்ஜ் செய்ய புதிய Mi ஏர் சார்ஜ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று ஜியோமி கூறுகிறது.

80W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங், 120W கம்பி சார்ஜிங் போன்ற பல புதிய தொழில்நுட்பங்களை முதலில் அறிமுகம் செய்த ஜியோமி நிறுவனத்திடமிருந்து இப்படி ஒரு மிரட்டலான தொழில்நுட்பத்தை யாரும் எதிர்பாராத நேரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதில் நீங்கள் கேம் விளையாடி கொண்டிருக்கோம் போதோ, நடந்து செல்லும் போதோ எவ்வித இணைப்பும் இல்லாமலே உங்கள் சாதனங்களை Mi ஏர் சார்ஜ் தொழில்நுட்பம் மூலம் சார்ஜ் செய்யலாம் என குறிப்பிட்டுள்ளது.

Mi ஏர் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த ஜியோமி!


இதுகுறித்து விளக்கிய ஜியோமி குளோபல் தலைமை நிர்வாக அதிகாரி லீ ஜுன், சார்ஜிங் தொழில்நுட்பம் நிறுவனத்தின் ஸ்பேஸ் பொசிஷனிங் மற்றும் எனர்ஜி ட்ரான்ஸ்மிஷம் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இது ஒரு உள்ளமைக்கப்பட்ட 5 பேஸ் இன்டர்பேஸ் ஆண்டெனாவை கொண்டுள்ளதால் எந்த சாதனத்தை சார்ஜ் செய்ய வேண்டும் என துல்லியமாக கண்டறிய முடியும் என்றார். மேலும் இதில் உள்ள 144 ஆண்டெனாக்கள் மில்லிமீட்டர் அலைகளை வெளியேற்றும் என்றும் விளக்கியுள்ளார்.

அதாவது இந்த 144 ஆண்டெனாக்கள் மில்லிமீட்டர்-அலை அதிர்வெண்களில் beam-forming மூலம் சக்தியை அனுப்புகின்றது. புதிய வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் பிற அணியக்கூடிய சாதனங்களையும் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், மேசை விளக்குகள் உட்பட பிற பொருட்களையும் சார்ஜ் செய்யும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் செயல்படுவதாக ஜியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்த முழு விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் இது சார்ஜிங் நிலையத்திலிருந்து ஓரிரு மீட்டர் தூரத்திற்கு 5 வாட் மின்சக்தியை வழங்கும் என தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக 2 மீட்டர் தூரம் வரை இந்தக் கருவியின் மூலம் டிஜிட்டல் சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். இதை வெற்றிகரமாக சந்தையில் அறிமுகம் செய்தால் ஜியோமி நிறுவனம் குறித்து பரவலாக பேசப்படும்.
Published by:Arun
First published: