ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இன்று வெளியாகும் Mi A3... இளைஞர்களைக் கவர ஜியோமி அதிரடி!

இன்று வெளியாகும் Mi A3... இளைஞர்களைக் கவர ஜியோமி அதிரடி!

Mi A3

Mi A3

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் Mi A3 ஸ்மார்ட்ஃபோனின் விலை 13 ஆயிரம் ரூபாய் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஜியோமி நிறுவனம் இன்று Mi A3 ஸ்மார்ட்ஃபோனை ஸ்பெயினில் வெளியிடுகிறது.

Mi A3 ஸ்மார்ட்ஃபோன் உடன் Mi A3 லைன் ஃபோனும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன நிறுவனமான ஜியோமி, சீனாவில் சமீபத்தில் வெளியிட்ட Mi CC9e ஸ்மார்ட்ஃபோனை அடிப்படையாகக் கொண்டு Mi A3 ஃபோனை வெளியிடுவதாகக் கூறப்படுகிறது. இந்திய நேரப்படி ஸ்பெயினில் இன்று மாலை 6.30 மணி அளவில் Mi A3 வெளியிடப்படுகிறது.

ஸ்பெயின் ஜியோமி தளத்தின் அடிப்படையில் வெளியீட்டு விழா மூலமாகவா அல்லது ஆன்லைன் லைவ் மூலமாக Mi A3 வெளியிடப்படுமா என்ற கேள்விக்கான பதில் இல்லை. சீனாவில் வெளியான Mi CC9e ஸ்மார்ட்ஃபோனை அடிப்படையாகக் கொண்டால் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் Mi A3 ஸ்மார்ட்ஃபோனின் விலை 13 ஆயிரம் ரூபாய் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவே 6 ஜிபி ரேம்+64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Mi A3 14 ஆயிரம் ரூபாய்க்கும் 6 ஜிபி ரேம்+128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Mi A3 16 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனைக்கு வரலாம். Mi A வரிசையில் Mi A3 ஃபோனும் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. ஆனால், Mi A3 லைட் இந்தியாவில் வெளியாக வாய்ப்பில்லை.

4,030mAh பேட்டரி திறன் கொண்ட Mi A3 நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகும் எனக் கருதப்படுகிறது.

மேலும் பார்க்க: ரெட்மி K20 மற்றும் K20 ப்ரோ வாங்க விருப்பமா? இன்று முதல் ஆல்ஃபா சேல்ஸ் புக்கிங்!

First published: