Mi 11 Ultra Review : ஜியோமியின் காஸ்ட்லி ஸ்மார்ட்போன் எம்ஐ 11 அல்ட்ராவின் சிறப்பம்சங்கள்!

ஜியோனியின் காஸ்ட்லி ஸ்மார்ட்போன்

தற்போது அல்ட்ரா ப்ரீமியம் ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ள ஜியோமி நிறுவனம். எம்ஐ 11 அல்ட்ரா (Mi 11 Ultra ) என்ற அல்ட்ரா ப்ரீமியம் செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

 • Share this:
  கடந்த சில வருடங்களில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்களை வழங்கி, இந்திய ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தது ஜியோமி நிறுவனம். நடுத்தர வர்க்க மக்களின் ஸ்மார்ட் போன் தேவைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

  தற்போது அல்ட்ரா ப்ரீமியம் ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ள ஜியோமி நிறுவனம். எம்ஐ 11 அல்ட்ரா (Mi 11 Ultra ) என்ற அல்ட்ரா ப்ரீமியம் செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலையாக ரூ.69,999 என நிர்ணயித்துள்ளது. இந்த எம்ஐ 11 அல்ட்ராவில் என்ன ஸ்பெஷல்? என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம்

  டிசைன்

  இந்த போன் கருப்பு, வெள்ளை என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் அலுமினியம் வண்ணத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அதனை கிளிக் செய்வது இலகுவாக இருக்கும். பார்ப்பதற்கு கனமாக தெரியும் இந்த போன் 234 கிராம் எடை கொண்டது. இது கையில் பிடிக்க வசதியாக உள்ளது. கேமரா செட்டப்பால் போனின் மேல் பக்கம் கனமாக தோன்றலாம். நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் தன்மையால் இதற்கு IP68 ரேட்டிங் கிடைத்துள்ளது. இந்த ரேட்டிங் கிடைத்த முதல் போன் இதுவாகும்.

  ALSO READ |  மருத்துவர்கள் பேச இனி கஷ்டம் இல்லை...மைக்குடன் கூடிய மாஸ்க்கை வடிவமைத்து கேரள மாணவர் அசத்தல்!

  டிஸ்பிளே

  இந்த போன் 6.8 இஞ்ச் QHD+E4 AMOLED டிஸ்பிளேவுடன் 120Hz ரிஃப்ரஸ் ரேட் மற்றும் HDR10+ டால்பி விஷன் செர்ட்டிஃபிகேஷன் கொண்டது. மேலும் இந்த போனின் டிஸ்பிளே அதிகபட்ச பிரைட்னஸ் 1700 nits கொண்டது. இது HDR10 பார்க்கும் போது இது பெரிதும் உதவும். மேலும் சிறப்பான கான்ட்ராஸ்ட் மற்றும் பிரைட்னஸ் ஆகியவற்ற உணர முடியும். இதனால் உங்களுக்கு சிறப்பான அனுபவம் கிடைக்கும். இந்த போன் Harmon Kardon-tune செய்யப்பட்ட இரண்டு ஸ்பீக்கர்கள் மேலேயும், கீழ் பகுதியிலும் கொண்டுள்ளது. இதனால் உங்களுக்கு ஸ்டீரியோ ஸ்பீக்கரின் அனுபவம் கிடைக்கும். இதன் ஸ்கிரீன் சிறப்பானது.

  உங்களுக்கு ஒரு ஸ்கிரீன் போதாதா? இன்னொரு ஸ்க்ரீனும் இருக்கிறது. ரியர் கேமராவில் 1.1 இஞ்ச் டிஸ்பிளே உள்ளது. இது எம் ஐ பேண்ட் 5 போன்றது. இதன் மூலமே உங்கள் போனின் நோட்டிஃபிகேஷன் போன்ற தகவல்களை பார்த்துக்கொள்ளலாம். இந்த போனின் செட்டிங்கில் ஸ்பெஷல் ஃபியேச்சர்ஸில் ரியர் டிஸ்பிளே மூலம் இதனை உபயோகிக்க முடியும்.

  ALSO READ | இந்திய சந்தையில் களமிறங்கியுள்ள ஒன்ப்ளஸ் டிவி 40Y1...டால்பி ஆடியோ, குரோம்கேஸ்ட் வசதிகள்- விலை என்ன தெரியுமா ?

  120Hz ரிஃபிரஸ் ரேட் மற்றும் 480Hz டச் சாம்பிளிங் ரேட் ஆகியவை இணைந்து சமூக வலைதளங்களில் ஸ்குரோலிங் செய்யும்போதோ அல்லது கேம் விளையாடும்போதோ ஸ்மூத்தான டச் அனுபவத்தை கொடுக்கும். மேலும இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரின்ட் வேகமாக உங்கள் போனை அன்லாக் செய்ய உதவும்.

  பெர்ஃபார்மன்ஸ் மற்றும் சாஃப்ட்வேர்

  இந்த போனின் பெர்ஃபார்மன்ஸ் சிறப்பாக இருக்கும். காரணம் இந்த போன் Qualcomm Snapdragon 888 SoC மற்றும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போன் சிறப்பான கேமிங் அனுபத்தை அளிக்கும். ரேம் செயல்பாடு நல்ல முறையில் இருக்கிறது. இதனால் ஆப்களை பயன்படுத்தும் போது அது செயல்பாடு தடங்கலாகாது. பேக்ரவுண்டில் இருக்கும் போது ஆப் தனது செயல்பாடை நிறுத்தாது. இதில் உள்ள 12ஜிபி மெமரி உள்ளதால் இந்த போன் ஆப்கள் தங்கு தடையின்றி செயல்பட உதவுகிறது.

  பேட்டரி லைஃப்

  இந்த போன் 5,000 mAh பேட்டரி கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து 7-8 மணி நேரம் வரை முழுமையாக பயன்படுத்த முடியும். இந்த போன் 67W வைர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யலாம். நீங்கள் போன் வாங்கும்போது உங்களுக்கு சார்ஜர் கிடைக்கும். ஆனால் அந்த சார்ஜர் 55W ஸ்பீட் சார்ஜராக உள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த ஜியோமி நிறுவனம் இதுகுறித்து சான்றிதழ் பெறுவதற்கான சிக்கல் இருக்கிறதாம். விரைவில் இந்த சார்ஜர் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

  ALSO READ | கோவிட்-19 தொற்றால் பண நெருக்கடியா? வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்க 7 எளிய வழிகள்!

  இந்த போனை 67W சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்தால் 36 மணி நேரத்தில் சார்ஜ் செய்யலாம். இந்த போன் USB 2.0 டைப் சி போர்ட் கொண்டுள்ளது. USB 3.0 போர்ட் கொடுப்பது முக்கியம். இதன் மூலம் ரீட் மற்றும் ரைட் பணிகளை விரைந்து செய்ய முடியும்.

  கேமரா

  இந்த போனின் விதவிதமான கேமரா இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த போன் பின்புறம் 3 கேமராக்களை கொண்டுள்ளது. அதில் மெயின் கேமரா 50MP சாம்சங் GN2 1/1.21 இஞ்ச் சென்சார் கொண்டுள்ளது. Sharp Aquos R6's 1-இஞ்ச் கேமரா சென்சாருக்கு பிறகு இது இரண்டாவது பெரிய கேமரா செட்டப்பாக பார்க்கப்படுகிறது.

  குளோஸ் அப் ஷாட்ஸின் போது சிறப்பான காட்சியை பதிவு செய்யும். பகல் நேரத்தில் கேமரா மூலம் பதிவு செய்யும் புகைப்படங்கள் ஷார்ப்பாக உண்மைக்கு நெருக்கமாக இருக்கும். இதன் டைனமிக் ரேஞ்ச் மற்றும் கான்ட்ராஸ்ட் மற்ற கேமராக்களை விட சிறப்பாக இருக்கும். இதில் உள்ள 48MP அல்ட்ரா வைட் கேமரா 128 டிகிரி ஃபீல்டு ஆஃப் வியூ மூலம் லேன்ட் ஸ்கேப் போட்டோக்களை பதிவு செய்ய முடியும். இதன் மூலம் ஒரு ஃபிரேமில் நிறைய காட்சிகளை/பகுதிகளை பதிவு செய்ய முடியும்.இதில் உள்ள 48MP டெலிபோட்டோ கேமரா மூலம் 120x டிஜிட்டல் ஜூமில் காட்சிகளை பதிவு செய்ய முடியும்.

  ALSO READ | உலகின் மிக நீண்ட விமான பாதையில் பயணித்த முதல் பெண் விமானி என்ற சாதனையை படைத்த இந்தியர்!

  அதாவது காட்சிகள் எவ்வளவு தூரம் உள்ளதோ அதனை பொறுத்தது. அதிக தூரம் ஜூம் செய்யும் போது சில காட்சிகள் சிறப்பானதாக இல்லை. மேலும் செல்ஃபி எடுக்க விரும்பினால் உங்களுக்கு இரண்டு ஆப்சன்கள் உள்ளது. வழக்கமான செல்ஃபி எடுக்க 20MP முன் பக்க கேமரா உள்ளது.

  பின் பக்க கேமராவை விட முன் பக்க கேமரா சற்று குறைவான ரிசல்ட்டையே அளிக்கிறது. இரண்டாவதாக ரியர் டிஸ்பிளே மூலம் நல்ல தரமான செல்ஃபியை எடுக்க முடியும். சில குறைகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இதில் உள்ள கேமரா வசதிகள், செமையான டிஸ்பிளே, பவர்ஃபுல் பெர்ஃபார்மன்ஸ் உள்ளிட்ட சிறந்த அனுபவத்தை தரும். இதில் உள்ள சாஃப்ட்வேர் வடிவமைப்பு முந்தைய ஜியோமி போன்களை காட்டிலும் சிறப்பாகவே உள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: