• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஃபோர்டு கார் உற்பத்தி ஆலைகளை வாங்க முயற்சிக்கும் எம்.ஜி மோட்டார்ஸ்- முயற்சி பலன்கொடுக்குமா?

ஃபோர்டு கார் உற்பத்தி ஆலைகளை வாங்க முயற்சிக்கும் எம்.ஜி மோட்டார்ஸ்- முயற்சி பலன்கொடுக்குமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்தியாவிலுள்ள ஃபோர்டு கார் உற்பத்தி ஆலைகளை வாங்குவதற்கு எம்.ஜி மோட்டார்ஸ் முயற்சிசெய்கிறது.

  • Share this:
    அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் பல்வேறு வகையான வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. தமிழ்நாட்டில் மறைமலை நகர் மற்றும் குஜராத்தின் சனந்த் பகுதிகளில் அந்நிறுவனத்தின் கார் உள்ளிட்ட வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இந்த ஆலைகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும்,

    கடந்த 10 ஆண்டுகளில் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியாவில் உள்ள இரண்டு ஆலைகளையும் மூட ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் ஆலைகள் மூடப்பட்டன.

    தற்போது இந்தியாவிலும் தொழிற்சாலைகளை மூடுவதால் 4,000 பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் வலியுறுத்திவந்தனர். இந்தநிலையில், ஃபோர்டு நிறுவனத்தை வாங்குவதற்கு எம்.ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இரண்டு நிறுவனத்துக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை தொடக்கநிலையில் உள்ளது என்று எக்கனாமிக்ஸ் டைம்ஸ் ஊடகத்தில் செய்திவெளியாகியுள்ளது. அதேநேரத்தில் ஃபோர்டு நிறுவனம் மகேந்திரா& மகேந்திரா மற்றும் ஓலா நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: