ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

செலவுகளை கட்டுப்படுத்த முடியவில்லை... மெட்டா எடுத்த அதிரடி நடவடிக்கை

செலவுகளை கட்டுப்படுத்த முடியவில்லை... மெட்டா எடுத்த அதிரடி நடவடிக்கை

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

Meta | கடந்த செப்டம்பர் மாதமே தேவையில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று தனது அனைத்து ஊழியர்களுக்கும் மெட்டா அறிக்கை ஒன்றை அனுப்பியது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஒரே நாளில் டிவிட்டரில் ஆயிரக்கணக்கானவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட தகவலையே புரிந்து கொள்ள முடியாத அதிர்ச்சியான சூழல் இருக்கும் நிலையில், இந்த வாரம் டிவிட்டரில் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் ஏகப்பட்ட நெருக்கடிகளை சந்தித்து வந்துள்ளது. அதன் எதிரொலியாக ஊழியர்கள் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதைப் பற்றிய முழு விபரங்களை இங்கே பார்க்கலாம்.

  மெடா நிறுவனத்தில், இந்த வாரம் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள் என்ற செய்தி தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. லாபம் இல்லாமல், எதிர்பார்த்த அளவுக்கு திட்டங்களை செயல்படுத்த முடியாமல், செலவுகளை சமாளிக்க முடியாமல் நிறுவனத்தின் பங்குகள் சரிந்த நிலையில், மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முயற்சியின் ஒரு அங்கமாகத்தான் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல், மெட்டா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 73% குறைந்துள்ளது என்பதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

  2016 ஆம் ஆண்டு ஆண்டிலிருந்து இதுவரை மெட்டா நிறுவனத்தின் பங்குகள் இந்த அளவுக்கு குறைந்ததில்லை. எனவே, செலவுகளைக் கட்டுப்படுத்த உடனடியாக வேறு வழி இல்லை என்று ஊழியர்கள் நீக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

  Also Read : உக்ரைனுக்கு இலவச தொழில்நுட்ப உதவியை செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு.!

  ஃபேஸ்புக்கில் பல்வேறு புதிய மாற்றங்களை அமல்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இந்த வாரம் மாஸிவ் லே-ஆஃப் என்று கூறப்படும் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கடந்த ஞாயிறன்று செய்தி வெளியிட்டது. ஆனால், எந்த துறையில், எந்தப் பிரிவில் வேலை பார்ப்பவர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்பதை பற்றி எந்த விவரமும் இல்லை. டிவிட்டரில் பெரும்பாலும் மார்க்கெட்டிங் மற்றும் தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்கள் கணிசமான அளவில் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். ஒருவேளை பேஸ்புக்கிலும் இந்தப் பிரிவில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலை பறிபோகுமொ என்ற அச்சம் எழுந்துள்ளது.

  இதற்கு முன்னோட்டமாக, கடந்த செப்டம்பர் மாதமே தேவையில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று தனது அனைத்து ஊழியர்களுக்கும் மெட்டா அறிக்கை ஒன்றை அனுப்பியது. ஃபேஸ்புக் தொடங்கியதிலிருந்தே அவ்வப்போது சில சில சறுக்கல்கள் இருந்தாலும் பெரிய அளவில் வளர்ச்சியை தான் கண்டுள்ளது. எனவே, இவ்வளவு எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள் என்பது இதுவே முதல்முறை.

  இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய மூன்று முன்னணி தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா மிகப்பெரிய தொகையை எதிர்கால தொழில்நுட்பமான ஆர்டிபிஷியல் டெக்னாலஜி மற்றும் விர்ச்சுவல் உலகத்தை உருவாக்கும் மெடாவெர்ஸ் என்ற ப்ராஜெக்ட்ல் முதலீடு செய்துள்ளது. கோவிட் பெருந்தொற்று உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கிய காலத்தில், மெட்டா நிறுவனம் பெரிய அளவில் வேலை வாய்ப்பை வழங்கியது. 2020 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 27,000 ஊழியர்கள் மெட்டாவில் பணியமர்த்தப்பட்டார்கள். அதுமட்டுமில்லாமல் அதைத் தொடர்ந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டார்ங்கள்.

  ஆனால், எதிர்பார்த்தபடி மெடாவெர்ஸ் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் அதிலும் மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது என்ற அறிக்கை சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

  ஃபேஸ்புக், டிவிட்டர் மட்டுமல்லாமல், ஸ்னாப்சாட், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பணி நீக்கம் என்பது தற்போது பெரிய அதிர்ச்சியாக உள்ளது. உலகம் முழுவதிலுமே பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதோடு, பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இது தவிர்க்க முடியாத சூழலாக பார்க்கப்படுகிறது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Facebook