Home /News /technology /

மெட்டா அவதார்களுக்கென விர்ச்சுவல் ஆடைகடை- மார்க் ஜுக்கர்பெர்க்கின் புதிய அறிமுகம்!

மெட்டா அவதார்களுக்கென விர்ச்சுவல் ஆடைகடை- மார்க் ஜுக்கர்பெர்க்கின் புதிய அறிமுகம்!

மெட்டா அவதாரங்கள்

மெட்டா அவதாரங்கள்

Virtual cloth for Meta avatars: மெட்டா மென்பொருளின் விர்ச்சுவல் அவதார்களுக்காக Balenciaga, Prada மற்றும் Thom Browne ஃபேஷன் விர்ச்சுவல் ஆடைகளை விற்க ஒரு டிஜிட்டல் கடை.

ஃபேஸ்புக் உரிமையாளர் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் டிஜிட்டல் ஆடைக் கடையை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். அங்கு பயனர்கள் தங்கள் அவதார்களுக்கான பிராண்டட் வடிவமைப்பாளர் ஆடைகளை வாங்கலாம் என்று தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று மெட்டா அமைப்பின் அங்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நேரலையில் ஜுக்கர்பெர்க் பேசினார். அதில் பேசும் போது இன்றைய தேதியின் மெட்டா மென்பொருள்களில் விர்ச்சுவல் அவதாரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அவற்றுக்காக ஃபேஷன் பிராண்டுகளான Balenciaga, Prada மற்றும் Thom Browne ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட விர்ச்சுவல் ஆடைகளை விற்க ஒரு டிஜிட்டல் கடையை அமைக்க இருப்பதாக ஜுக்கர்பெர்க் அறிவித்தார்.



விர்ச்சுவல் ஆடைகளின் விலை $2.99 ​​மற்றும் $8.99 க்கு இடையில் இருக்கும் என்று கூறினார். இது நிஜத்தில் அந்த பிராண்டுகளின் விலையை விட சற்றுக் குறைவு என்று கூறப்படுகிறது.

விண்கல்லை எரித்துச் சாம்பலாக்கிய சூரியன்!

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் அதன் பிற சேவைகளில் பயனர் அடையாளத்தை இணைப்பதற்கான ஒரு வழியாக அவதார்கள் உருவாகியுள்ளன. இதன் மூலம் தளங்களை ஒன்றாக இணைத்து, பயனர்கள் ஒன்றுகூடக்கூடிய, பகிரப்பட்ட, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட டிஜிட்டல் உலகங்களின் அதிவேக "மெட்டாவெர்ஸ்" உருவாக்கத்தை நோக்கிச் செல்கிறது.

நிறுவனத்தின் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களைப் பயன்படுத்துபவர்கள் வீடியோ கேம்களை விளையாடுவதற்கும், உடற்பயிற்சி வகுப்புகள் எடுப்பதற்கும், கான்ஃபரன்ஸ் அழைப்புகளில் பங்கேற்பதற்கும் அவதார்களை அமைத்துள்ளனர். டிஜிட்டல் ஆடைகள் ஜனவரி முதல் Facebook, Instagram மற்றும் Messenger இல் மட்டுமே கிடைக்கும்படி உருவாக்கப்படும் என்று செய்தி வெளிடப்பட்டுள்ளது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Facebook, Instagram, Mark zuckerberg, Metaverse

அடுத்த செய்தி