சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டுமே உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் முன்னணி தளங்களாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும், மாதாந்திர இணக்க அறிக்கையை வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையில், டிசம்பர் மாத அறிக்கை வெளியாகி இருக்கிறது. இதில், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் 3.4 கோடிக்கும் மேற்பட்ட உள்ளடக்கங்களை நீக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
50 லட்சத்துக்கும் மேற்பட்ட யூசர்களைக் கொண்ட டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஒவ்வொரு மாதமும் இணக்க அறிக்கையை வெளியிட வேண்டும் என்பது தொழில்நுட்ப விதிகள் 2021 இன் கீழ் கட்டாயமாக்கப்பட்டது. டிசம்பர் 2022க்கான மாதந்திர அறிக்கையில், ஃபேஸ்புக்கின் 13 பாலிசிகளின் அடிப்படையில், 2.25 கோடிக்கும் மேற்பட்ட பதிவுகளும், இன்ஸ்டாகிராமின் 12 பாலிசிகளின் அடிப்படையில், 1.20 கோடிக்கும் மேற்பட்ட பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன.
இணையம் உலகின் பெரும்பாலான நபர்களின் வாழ்வும் ஒரு அங்கமாக மாறியுள்ள நிலையில், தொழில் நுட்ப ஜாம்பவான்கள் ஒவ்வொரு யூசரின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டிசம்பர் 1 முதல் 31 வரை, இந்திய குறைதீர்ப்பு செயல்முறையின் கீழ் ஃபேஸ்புக்கில் 764 புகார்கள் பாதிவாகியுள்ளன. அதில் 345 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, யூசர்களுக்கு அதற்கான கருவிகள் வழங்கப்பட்டன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read More : ’காலிங் ஷார்ட் கட்’... வாட்ஸ் அப்பில் வருகிறது புதிய அப்டேட்
உள்ளடக்கம் சார்ந்த, ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட சேனல்களில் பதிவாகும் புகார்கள், தானாகவே சரி செய்து கொள்ளக் கூடிய வழிமுறைகள் உள்ள தீர்வுகள், ஹேக் செய்யப்பட்ட கணக்கை மீட்பதற்கான வழிகள், தரவுகள் டவுன்லோடு செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தனது மாதாந்திர அறிக்கையில் மெட்டா தெரிவித்துள்ளது.
இதைப் பற்றி மெட்டா தெரிவிக்கையில் ‘ஸ்பெஷல் ஆய்வு தேவைப்படும் 419 புகார்களும், எங்கள் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 205 புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தோம். 214 ஆய்வு செய்து, நடவடிக்கை தேவையில்லை என்று முடிவு செய்தோம்’ என்று கூறியது.
இதே போல, இன்ஸ்டாகிராமில் குறை தீர்க்கும் அமைப்பில் பதிவான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்களில், 2 ஆயிரத்துக்கும் மேலான புகார்களுக்கு யூசர்கள் தீர்வு பெற கருவிகள் வழங்கியும், 8 ஆயிரத்துக்கும் மேலான புகார்களுக்கு சிறப்பு ஆய்வு தேவை என்ற அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்பட்டும், 5 ஆயிரத்துக்கும் மேலான புகார்களுக்கு ஆய்வு மட்டும் செய்து நடவடிக்கை எதுவும் எடுக்கத் தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
இது மட்டுமல்லாமல், இதே போல மாதந்திர அறிக்கையை வாட்ஸ்அப்பும் வெளியிட வேண்டும். வாட்ஸ்அப் ஒவ்வொரு மாதமும் லட்சகணக்கான கணக்குகளை தடை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Meta, Technology