ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இனி பாலின அடிப்படையில் விளம்பரங்கள் வராது - புதிய கொள்கையை பின்பற்றும் மெட்டா நிறுவனம்!

இனி பாலின அடிப்படையில் விளம்பரங்கள் வராது - புதிய கொள்கையை பின்பற்றும் மெட்டா நிறுவனம்!

மெட்டா விளம்பரங்கள்

மெட்டா விளம்பரங்கள்

மார்ச் மாதம் முதல் பதினெட்டு வயதுக்கு குறைவானவர்களுக்கு காண்பிக்கப்படும் விளம்பரங்களில் பல்வேறு விதமான மாற்றங்களை மெட்டா நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் முன்னிலையில் இருக்கும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டுமே மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இந்த வலைதளங்களில் நம்முடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்கும், மற்றவர்களுடைய பதிவுகளை பார்ப்பதற்கும், மற்றவர்களை தொடர்பு கொள்வதற்கும் நம்மால் முடியும். மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு நாம் எந்தவித சிறப்பு கட்டணத்தையும் செலுத்தவும் தேவையில்லை.

ஆனால் கட்டணம் இன்றி நமக்கு சேவையை கொடுக்கும் அந்த நிறுவனங்கள் எவ்வாறு பணம் ஈட்டுகிறது என்பதைப் பற்றி பலருக்கு சந்தேகம் இருக்கலாம். நாம் அந்த செயலிகளை பயன்படுத்தும் போது அவற்றில் நம்முடைய தரவுகளை சேகரிப்பதற்கான அனுமதியை அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதி அளித்து நாம் அந்த செயலிகளை பயன்படுத்தும்போது நமக்கு விருப்பமான பதிவுகள், நம் விருப்பம் காட்டும் ப்ராடெக்டுகள், நம்முடைய வயது, இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் விளம்பரங்கள் நமக்கு காண்பிக்கப்படும். இவ்வாறு நம்முடைய தகவல்களை மற்ற நிறுவனங்களுக்கு அளிப்பதன் மூலம் மெட்டா நிறுவனம் பணமீட்டி வருகிறது.

வரும் பிப்ரவரி மாதம் முதல் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் விளம்பரங்களை காண்பிக்கும் விளம்பர நிறுவனங்கள், யூசர்களின் வயது மற்றும் அவர்கள் இருக்கும் இடத்தின் அடிப்படையில் மட்டும் தான் விளம்பரங்களை காண்பிக்க முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது.

விளம்பர நிறுவனங்கள், யூசர்களின் வயது மற்றும் அவர்களின் இருப்பிடத்தின் அடிப்படையில் காண்பிக்கப்படும் விளம்பரங்கள் அவர்களுக்கு விருப்பமான மற்றும் அவர்கள் இருக்கும் இடத்தில் கிடைக்கக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவை மட்டும்தான் விளம்பரங்களாக காண்பிக்கப்படும்.

Also Read : இந்தியாவை குறி வைத்த ஆப்பிள்.. ரீடைல் பணியாளர்களை வலைவிரித்து தேடும் நிறுவனம்!

இதைத் தவிர மார்ச் மாதம் முதல் பதினெட்டு வயதுக்கு குறைவானவர்களுக்கு காண்பிக்கப்படும் விளம்பரங்களில் பல்வேறு விதமான மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளனர். மேலும் டீன் ஏஜ் வயது யூசர்கள் ஏதேனும் குறிப்பிட்ட நிறுவனத்தின் விளம்பரங்களை தவிர்க்க விரும்பினால் அவர்களை ஹைட் செய்வதற்கான வசதி உண்டு.

ஏற்கனவே மெட்டா நிறுவனத்தின் கொள்கைகளில் சார்ந்தவர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட அடல்ட் கன்டன்ட்களை பார்க்க முடியாது என்ற கட்டுப்பாடு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர கூடுதலாக டீன் ஏஜ் வயதை சார்ந்தவர்களுக்காக டூல்ஸ் பிரைவசி செட்டிங்ஸ் பற்றிய செய்திகளையும் தங்களது பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Advertisement, Facebook, Instagram, Meta