சமூக ஊடகங்களில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்பதற்கு அடையாளமாக நீல நிறத்தில் டிக் குறியீடு அந்த நிறுவனத்தால் வழங்கப்படும். கடந்த காலங்களாக சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், போலிக் கணக்கு மோசடிகளும் எழுப்பத் தொடங்கியது. அதனைத் தடுக்கும் வகையிலும் நிறுவனத்திற்கு லாபம் சேர்க்கும் வகையிலும் சமூக ஊடக நிறுவனங்கள் நீல நிற குறியீடு பெறப் பணம் வசூலிப்பதாக அறிவித்து வருகின்றனர்.
முதலில் ட்விட்டரில் கணக்கை அங்கீகரிப்பதற்கான நீல நிற குறியீட்டைப் பெறுவதற்கு மாத கட்டணம் செலுத்தும் முறையைக் கடந்த நவம்பரில் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் அறிவித்தார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிலும் கட்டணம் செலுத்தி நீல நிற அடையாளத்தை பெறும் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் தற்போது அறிவித்துள்ளார்.
இதற்கான மாதக் கட்டணமாக, வலைத்தளங்களில் பயன்படுத்த 992 ரூபாயும், ஐபோன் பயன்பாட்டாளர்கள் 1,210 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Also Read : ட்விட்டரை போல் பேஸ்புக், இன்ஸ்டாவிலும் ப்ளூ டிக் பெற கட்டணம்.. பயனர்கள் அதிர்ச்சி..!
அந்தந்த நாட்டின் மூலம் வழங்கப்படும் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தியே இந்த நீல நிற அங்கீகாரத்தைப் பெற முடியும் என்பதால், இதன் மூலம், போலிக் கணக்குகள் உருவாக்கப்படுவதைத் தடுக்க முடியும் என மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நடைமுறை இந்த வாரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், விரைவில் மற்ற நாடுகளில் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.