iPhone 14 , Apple Watch Series 8, Apple Watch SE (2வது தலைமுறை), மற்றும் Apple Watch Ultra ஆகிய மாடல்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் கார் விபத்து கண்டறிதல் அம்சத்தையும் பெறுவீர்கள். இது நீங்கள் கார் விபத்தை நேர்ந்த பிறகு அவசர சேவைகளுடன் உடனுக்குடன் இணைக்க உதவுகிறது.
ஆப்பிளின் கார் விபத்து கண்டறிதல் அம்சம் எந்த வண்டிகளை தகவமைக்கும் ?
விபத்து கண்டறிதல் அம்சமானது முன்-தாக்கம், பக்க-தாக்கம் மற்றும் பின்-இறுதி மோதல்கள் மற்றும் ரோல்ஓவர்கள்-செடான்கள், மினிவேன்கள், SUVகள், பிக்கப் டிரக்குகள் போன்ற வண்டிகளின் கடுமையான விபத்துக்களைக் கண்டறிவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கார் விபத்து கண்டறிதல் அம்சம் எவ்வாறு செயல்படுகிறது?
உங்கள் iPhone 14 மாடல்களில் கிராஷ் கண்டறிதல் அம்சம் இயல்பாகவே இயக்கப்படும். எனவே நீங்கள் செல்லும் கார் விபத்துக்குள்ளானால் சுற்றி உள்ள அதிர்வுகளை வைத்து , "நீங்கள் விபத்தில் சிக்கியது போல் தெரிகிறது" என்று எச்சரிக்கையை காண்பிக்கும். பின்னர் ஐபோன் அல்லது ஆப்பிள் வாட்சில் அலாரம் ஒலிக்கும் மற்றும் திரையில் அவசர அழைப்பு ஸ்லைடரைக் காண்பிக்கும்.
நீங்கள் சுய நினைவுடன் இருந்தால் அதன் ஸ்லைடை தள்ளி அவசர உதவிகளை அழைக்க முடியும். அப்படி நீங்கள் சுயநினைவின்றியோ அல்லது போனை எடுக்க முடியாத நிலையில் இருந்தால் 20 வினாடிகள் கழித்து உங்கள் சாதனம் தானாகவே அவசர சேவைகளை அழைக்கும்.
அதனுடன், நீங்கள் அவசரகால தொடர்புகளைச் சேர்த்திருந்தால், உங்கள் சாதனம் உங்கள் இருப்பிடத்தை அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது மற்றும் நீங்கள் மோசமான கார் விபத்தில் சிக்கியுள்ளீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கும்.
சில நேரங்களில் விபத்து கண்டறிதல் அம்சம் ரோலர் - கோஸ்டர் பயணங்களின் போது தவறாக ஆன் ஆகி செய்திகளை அனுப்பலாம். அது போன்ற சமயங்களில் மட்டும் போன் அல்லது வாட்ச்களை எடுத்து செல்ல வேண்டாம். அல்லது அப்போது மட்டும் செட்டிங்கில் கார் விபத்து எச்சரிக்கைகள் மற்றும் தானியங்கி அவசர அழைப்புகளை முடக்கி வையுங்கள். ஆனால் அதன் பின் மறக்காமல் ஆன் செய்து கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Apple iphone, IPhone