முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / மெசேஜை இனி எடிட் செய்ய முடியும் - வாட்ஸ் ஆப்பில் அசத்தல் அப்டேட்

மெசேஜை இனி எடிட் செய்ய முடியும் - வாட்ஸ் ஆப்பில் அசத்தல் அப்டேட்

வாட்ஸ்ஆப் அப்டேட்

வாட்ஸ்ஆப் அப்டேட்

இந்த வசதியை பயன்படுத்த, வாட்ஸ் ஆப் செயலியை கண்டிப்பாக அப்டேட் செய்ய வேண்டும் எனவும், முதலில் இந்த அப்டேட் அப்பிள் மொபைல்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaAmericaAmerica

உலகளவில் வாட்ஸ் ஆப் செயலியை 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப்பில் அவ்வப்பொழுது புதிய விதமான அப்டேட்கள் பயனர்கள் எளிதாக உபயோகிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படும். அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியில் புதிய அப்டேட் வரப்போவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

புதிய அம்சத்தில் ஒருவருக்கு அனுப்பிய மெசேஜில் தவறு இருக்கும் பட்சத்தில் 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்ய முடியும். தற்போது வரை, சோதனை அடிப்படையிலேயே இந்த வசதி உள்ளது. அண்மையில் தான் வீடியோ காலில் பிக்சர் இன் பிக்சர் வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியது.

தற்போது வாட்ஸ்ஆப் செயலில் அனைவருக்கும் மெசேஜை டெலீட் செய்யும் வசதி உள்ளது. இந்த அப்டேட் வந்த பிறகு, அதை பலர் பயன்படுத்தபோவதில்லை என்ற கருத்தும் உள்ளது. மேலும் இது இந்த அப்டேட் மூலம் மெசேஜை மட்டும் தான் மாற்ற முடியும் என்றும், ஒரு புகைப்படத்தோடு அனுப்பும் தகவலை மாற்ற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வசதியை பயன்படுத்த, வாட்ஸ் ஆப் செயலியை கண்டிப்பாக அப்டேட் செய்ய வேண்டும் எனவும், முதலில் இந்த அப்டேட் ஆப்பிள் மொபைல்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம், நெடுநாள் எதிர்பார்ப்பாக உள்ள எடிட் செய்யும் அம்சம் வரும் பட்சத்தில் எழுத்துப்பிழைகள் குறையவும் அதனை சரிசெய்ய ஏதுவாகவும் இருக்கும் என்று வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Meta, Technology, WhatsApp, Whatsapp Update