"வாயில்லா ஜீவன்கள்" என்று அழைக்கப்படும் விலங்குகள் எழுப்பும் சத்தங்களுக்கும் பொருள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த சத்தங்களுக்கு உரிய பொருளைப் புரிந்து கொள்ள செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
MeowTalk என்னும் செயலி, பூனைகள் எழுப்பும் வெவ்வேறு சத்தங்களுக்கான பொருளைப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் தற்போது 13 சொற்றொடர்கள் இடம்பெற்றுள்ளன.
"எனக்கு உணவு வேண்டும்", "நான் கோபமாக இருக்கிறேன்", "என்னைத் தனியே விடுங்கள்!" என்பது போன்ற சொற்றொடர்கள் இந்த பட்டியலில் உள்ளன. ஒவ்வொரு பூனை எழுப்பும் 'மியாவ்' சத்தத்தின் பொருளும் வேறுபட்டது. அதனால், பொதுவான தளத்தை அமைப்பதற்குப் பதிலாக, வெவ்வேறு பூனைகளின் ஒலிக்குறிப்புகளைப் பதிவுசெய்து அதற்கேற்ப புரிந்துகொள்ளும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
MeowTalk செயலியைத் தற்போது Google Play, Apple App Store ஆகிய தளங்களில் இருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cat