Home /News /technology /

Mobile Addiction : மொபைல் பைத்தியமா நீங்கள்? உடனே தூக்கிப்போடுங்க - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

Mobile Addiction : மொபைல் பைத்தியமா நீங்கள்? உடனே தூக்கிப்போடுங்க - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

சோசியல் மீடியா

சோசியல் மீடியா

Mobile Addicts : சோசியல் மீடியாக்கள் தங்களது மீதான சரிபார்ப்புகளை சோதனை செய்யும் இடமாக மாறியுள்ளது.

சமீப காலமாக இளைஞர்கள் சோசியல் மீடியாவிற்கு மிகவும் அடிமையாகி வருவதாகவும், இதனால் கடுமையான மனநல பிரச்சனைகள் மற்றும் நோய்களுக்கு ஆளாவதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன் இல்லாத நபர்களை பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் வழியாக சோசியல் மீடியாக்கள் செய்யும் தாக்கம் நாளுக்கு நாள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் ட்விட்டர் போன்ற சோசியல் மீடியாக்களில் அதிக நேரத்தை செலவிடுவது தெரியவந்துள்ளது.

இந்தியர்கள் சராசரியாக நாளொன்றுக்கு இரண்டரை மணி நேரத்தை சோசியல் மீடியாவில் பொழுதுபோக்குவதற்காக பயன்படுத்துவதாகவும், இதே கால அளவு 18 முதல் 24 வயதுடையவர்கள் இடையே மேலும் அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் :  Y1S மற்றும் Y1S Edge ஸ்மார்ட் டிவி சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்திய OnePlus... விலை மற்றும் சிறப்பம்சங்கள்

இந்தியாவை சேர்ந்த 18 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இளம் தலைமுறையினர் ஃபேஸ்புக்கில் 97.2 மில்லியனும் மற்றும் இன்ஸ்டாகிராமில் 69 மில்லியனும் அக்கவுண்ட் வைத்துள்ளனர். இப்படி சோசியல் மீடியாவிற்கு அடிமையாகும் இளம் தலைமுறையினருக்கு மனநல பிரச்சனைகள் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.

UNICEFன் கூற்றுப்படி, 15 முதல் 24 வயதுடைய 7 இந்தியர்களில் ஒருவர் மனச்சோர்வுக்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சுயமரியாதை இழப்பு, மோசமான தேர்வு மற்றும் பிற தவறான நடைமுறைகளுக்கு வழிவகுப்பதாக கூறப்படுகிறது. பிறரிடம் மனம் விட்டு பேசுவதில் தயக்கம், வேலையை முறையாக செய்து முடிக்காதது, பரீட்சை மற்றும் கற்றலில் தோல்வி, போதைப்பொருள் பயன்பாடு ஆகியவற்றுடன் தற்கொலை எண்ணமும் அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் :  இன்று அறிமுகமாகும் One Plus Nord- ஸ்மார்ட்போனின் புதிய மாடல்.. வெளியீட்டை நேரலையில் காண இதை செய்யுங்கள்..

சோசியல் மீடியாக்கள் தங்களது மீதான சரிபார்ப்புகளை சோதனை செய்யும் இடமாக மாறியுள்ளது. ஆணோ, பெண்ணோ தான் போஸ்ட் செய்யும் போட்டோ அல்லது கருத்துக்கு எவ்வளவு லைக்குகள், கமெண்ட்ஸ்கள் மற்றும் ரீட்வீட்கள் கிடைக்கின்றன என்பதை வைத்து தோற்றம், புத்திசாலித்தனம் மற்றும் அவருக்கான மதிப்பு ஆகியவற்றை முடிவு செய்கிறது.சோசியல் மீடியாவை பயன்படுத்தும் இளம் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி தன்னை ஒரு பிரபலமான நபர் போல் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர். அதற்கு வசதியாக பில்டர்களை பயன்படுத்தி அழகு மற்றும் உடல் சம்பந்தமான குறைகளை மறைத்து, தங்களை சுற்றி ஒரு மாய உலகை உருவாக்கி கொள்கின்றனர். இன்ஸ்டாகிராமை திறந்தாலே பிட்னஸ் பற்றிய புகைப்படங்கள் மற்றும் டிப்ஸ்கள் தான் கொட்டிக்கிடக்கின்றன.

இதையும் படியுங்கள் :  ‘மேட் இன் இந்தியா’ பொருட்களுக்கு தனி ஸ்டோர் தொடங்கியுள்ள அமேசான் நிறுவனம்!

இது இளைஞர்களுக்கு கிரேட்டர் புலிமியா, வெறித்தனமாக உடற்பயிற்சி செய்வது, தவறான உணவு கட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளுக்கு தள்ளுகிறது. இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பெண்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களது உடல் அமைப்பை பிறருடன் பொருத்தி பார்த்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதும், தங்களது தோற்றத்தை மாற்றிக்கொள்வதற்கு முன்னுரிமை அளிப்பதும் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் பிரபல ஜர்னல் ஒன்று நடத்திய ஆய்வின் படி, சுமார் 32% டீன் ஏஜ் பெண்கள் தங்கள் உடலைப் பற்றி மோசமாக எண்ணும் போது அதனை இன்ஸ்டாகிராம் மேலும் மோசமாக உணரவைப்பதாக கூறியுள்ளனர். மேலும், ஃபேஸ்புக்கில் குறைந்தது 43% யூஸர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும், மூன்றில் ஒரு டீன் ஏஜ் பெண், அழகாக இருப்பதாக காட்டுவதையே விரும்புவதும் தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள் :  மீண்டும் 50 சீன ஆப்களுக்கு தடை... ஸ்மார்ட்போன் கேம் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

இதனால் சோசியல் மீடியாவை பயன்படுத்துவதை கட்டுப்படுத்து பெரும் சவாலாக மாறியுள்ளது. 18 முதல் 35 வயதுக்குட்பட்டோருக்கு மனச்சோர்வு, பதட்டம் போன்ற மனநலம் தொடர்பான தீவிர சிகிச்சைகள் தேவைப்படுகிறது. அதேசமயம் பாதுகாப்பான இடங்களில் தனிநபர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அனுமதி அளிக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்ப்பது தொடர்பாக நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

குடும்பம் மற்றும் நண்பர்கள் போன்ற ஆதரவு அமைப்புகள், பிரச்சினை தொடர்பான காரணிகளைப் புரிந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்க தொடங்க வேண்டும். கூடுதலாக, கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்ள, பணியிடம் மற்றும் கல்வி கட்டமைப்புகளை மறுவடிவமைக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Facebook, Instagram, Mental Health, Social media, Twitter

அடுத்த செய்தி