ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ செயற்கை தோல்... பிரெஞ்சு நிறுவனத்தின் ஆராய்ச்சி!

தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ செயற்கை தோல்... பிரெஞ்சு நிறுவனத்தின் ஆராய்ச்சி!

செயற்கை தோல்

செயற்கை தோல்

1800 களில் இருந்து Urgo நிறுவனம்  மருத்துவ ஆடைகளை தயாரித்து வருகிறது. செயற்கை தோல் தயாரிப்பு வெற்றிகரமாக முடிந்தால் மருத்துவ உலகில் இது ஒரு பெரிய சாதனையாக அமையும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிதாக தோல் உருவாக பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு பதிலாக செயற்கை தோலை உருவாக்கும் முயற்சியில் பிரெஞ்சு நிறுவனமான உர்கோ ஈடுபட்டுள்ளது.

ஆசிட் வீச்சு, தீவிபத்து உள்ளிட்ட சம்பவங்களால் மனிதர்களின் தோல் என்பது பெரிதும் பாதித்துவிடுகிறது. அதைப் பழையபடி இயல்புக்கு கொண்டு வருவது என்பது அனைவருக்கும் சாத்தியம் அல்லாதது. இதற்காக "ஹோலி கிரெயில் ஆஃப் காயம் ட்ரீட்மெண்ட்" என்று கருதப்படும், $106 மில்லியன் டாலர்  மதிப்பில் "ஜெனெசிஸ்" திட்டம் 2030 ஆண்டுக்குள் இந்த செயற்கை தோல் வடிவமைப்பை பிரெஞ்சு நிறுவனம் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.

நம் உடலுக்கு முதல்நிலை கவசமாக இருப்பது தோல் தான். வெளிப்புற சூடு, குளிர், உராய்வுகளில் இருந்து பாதுகாப்பது மற்றும் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவது உட்பட தோலின் அனைத்து செயல்பாடுகளையும் செய்யும் அளவிற்கு ஒரு செயற்கை தோலை வடிவமைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க:  உலகளவில் 1 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது - ஐக்கிய நாடுகள் அறிவிப்பு!

செயற்கை தோல் மனித சருமத்திற்கு அரணாக வரும்போது மற்ற மனித செல்களை போலவே அதே நிலைத்தன்மையைப் பிரதிபலிக்க உயிருள்ள செல்களை இந்த செயற்கை தோலோடு உட்புகுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர். 1800 களில் இருந்து Urgo நிறுவனம்  மருத்துவ ஆடைகளை தயாரித்து வருகிறது. செயற்கை தோல் தயாரிப்பு வெற்றிகரமாக முடிந்தால் மருத்துவ உலகில் இது ஒரு பெரிய சாதனையாக அமையும்.

"2000 களில் இருந்து, உடல் பிரச்சனைகளை சரி செய்யும் தன்மை கொண்ட பொருட்களால் மருத்துவ ஆடைகளை செய்து வருகிறோம். இன்றைய கால கட்டத்தில் மருந்துகளோடு மருத்துவ உரைகளும் நல்ல பலனை தந்து வருகிறது. அவை உடலில் உள்ள சிக்கல்களோடு பேசுகின்றன. சரி செய்ய உதவுகின்றன" என்று உர்கோவின் ஆராய்ச்சி இயக்குனர் லாரன்ட் அபெர்ட் கூறினார்.

இதேபோன்ற செயற்கை தோல் தயாரிப்பு ஒன்று இதற்கு முன்பு தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்திலும் உருவாக்கப்பட்டது. அது ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டு தயாரிக்கப்பட்டது. அதை மிஞ்சி தீக்காயங்களால் தோலை இழந்த நபர்களுக்கு உதவவே இந்த தயாரிப்பு கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

First published:

Tags: Research, Skin Care