நிலவில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க பரிசீலனை- மயில்சாமி அண்ணாதுரை

நிலவில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க பரிசீலனை- மயில்சாமி அண்ணாதுரை
இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை (கோப்பு படம்)
  • Share this:
நிலவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இயற்பியல் மன்றத்தைத் தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, ”தொலைதொடர்பு உள்ளிட்ட தேவைகளுக்கான செயற்கைக்கோள்களை தனியார் நிறுவனங்கள் தயாரித்து வழங்கலாம்” என்று கூறினார்.

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தை அடிக்கடி மாற்றியமைக்க வேண்டியிருப்பதால், நிலவில் ஆய்வு மையத்தை அமைக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளதாகவும், அதனை ஆய்வுசெய்ய அமெரிக்கா விண்கலத்தை அனுப்ப உள்ளதாகவும் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.


First published: January 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்