நீங்கள் ஒரு மாஸ்டர்கார்ட் (Master Card) யூசர் என்றால் கூடிய விரைவில் ஸ்மைல் செய்வதன் மூலம், அதாவது கார்டு அல்லது மொபைல் போனின் தேவை எதுவும் இல்லாமல் வெறுமனே கேமராவை பார்த்து சிரிப்பதன் வழியாக நீங்கள் பணம் செலுத்தலாம். ஆம்! நீங்கள் படித்தது சரிதான். இந்த அமெரிக்க பைனான்ஸ் நிறுவனமானது பணம் செலுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளை முன்னெடுத்து வருகிறது, அவற்றில் ஒன்று தான் 'ஸ்மைல் அண்ட் பே' ஆகும். அதாவது நீங்கள் கேமராவைப் பார்த்து சிரிப்பதன் வழியாக உங்கள் மாஸ்டர்கார்ட் வழியாக பணம் செலுத்த முடியும்.
இது தவிர்த்து, ரீடரின் முன்னால் கையை அசைப்பதன் வழியாக பணம் செலுத்தும் மற்றொரு பேமண்ட் செயல்முறையும் நடைமுறைக்கு வர உள்ளது. பயோமெட்ரிக் சந்தை வருகிற 2026 ஆம் ஆண்டுக்குள் 18.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாஸ்டர்கார்டு அதன் பயோமெட்ரிக் செக்அவுட் திட்டத்தின் கீழ் மிகவும் தீவிரமாக செயல்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மேலும் இந்நிறுவனத்தின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் அனைத்து மாஸ்டர்கார்டுகளும் விரைவில் ஒரு புன்னகை செய்வதன் மூலம் அல்லது கையை அசைப்பதன் மூலம் வேலை செய்யும்.
அது ஒரு பெரிய சில்லறை விற்பனையாளர் ஆக இருந்தாலும் சரி அல்லது சிறிய பெட்டி கடையாக இருந்தாலும் சரி, வேலை செய்யும்.
மாஸ்டர்கார்ட் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் "இந்தத் திட்டம் வங்கிகள், வணிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்கள் கடைபிடிக்கும் தரநிலைகளின் தொகுப்பை அடிப்படையாக கொண்டது. மக்கள் பயோமெட்ரிக் முறையில் பணம் செலுத்தும்போது தனிப்பட்ட தகவலின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
சுருக்கமாக இது விரைவான பரிவர்த்தனை நேரங்களுக்கும் மேம்பட்ட பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும். மேலும் இதற்காக மாஸ்டர்கார்ட் யூசர்கள் நிறுவனத்தின் பயோமெட்ரிக் செக்அவுட் திட்டத்தில் சேர வேண்டும். அது முடிந்ததும், கேமராவைப் பார்த்து சிரித்தால் போதும் பணம் செலுத்தப்படும். மாஸ்டர்கார்டின் ஸ்மைல் அண்ட் பே திட்டத்தின் 'ஃபர்ஸ்ட் பைலட்' (சோதனை) பிரேசிலில் நிறுவனத்தின் கூட்டாளர்களான பேஃபேஸ் (Payface) மற்றும் சென்ட் மார்க்கே (St Marche) உடன் இணைந்து தொடங்கப்படும்.
Also Read : டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் - ரிசர்வ் வங்கி அறிக்கை!
சாவோ பாலோவில் உள்ள அனைத்து சென்ட் மார்க்கே பல்பொருள் அங்காடிகளும் மாஸ்டர்கார்ட்டின் இந்த திட்டத்தை செயல்படுத்த, பே ஃபேஸ் ஆனது இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளது. இதற்காக பதிவுசெய்த பிறகு, யூசர்கள் தங்கள் கார்டு அல்லது மொபைல் போனை பயன்படுத்தாமல் வெறுமனே சிரித்துவிட்டு செக் அவுட்டில் பணம் செலுத்த முடியும்.
Also Read : Google Pay, PayTM வழியாக ஆன்லைனில் தங்கம் வாங்குவது எப்படி?
எதிர்காலத்தில் மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவிற்கு இந்த திட்டத்தை கொண்டு வரவும், இப்படியாக உலகம் முழுவதும் இதை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாகவும் மாஸ்டர்கார்டு நிறுவனம் கூறுகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க பயோமெட்ரிக் அங்கீகாரத்தை விமர்சிக்கும் விமர்சகர்கள், இந்த திட்டத்தின் வழியாக எதிர்காலத்தில் ஏற்படும் எதிர்பாராத விளைவுகள் குறித்தும் பதிவு செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.