ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Mask Gun: அசத்தும் இந்திய ஆன்லைன் ஷூட்டர் கேம்.. புதிய சாதனை!

Mask Gun: அசத்தும் இந்திய ஆன்லைன் ஷூட்டர் கேம்.. புதிய சாதனை!

Maskgun

Maskgun

புனேவைச் சேர்ந்த சூப்பர் கேமிங் நிறுவனத்தால் மாஸ்க் கன் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு மல்டி பிளேயர் ஷூட்டிங் கேம் ஆகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பேட்டில் கிரவுண்ட்ஸ் இந்தியா கேமுக்கு தற்போது உள்ளூரில் உருவாக்கப்பட்ட ஒரு கேம் போட்டியாளராக உருவெடுத்திருக்கிறது. மாஸ்க் கன் (Mask Gun) முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த ஷூட்டர் கேம் தற்போது 50 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் விளையாடப்படுகிறது. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஒரு கேமின் அரிதான ஒரு சாதனை இதுவாகும். மேலும் FAU:G போன்ற விளையாட்டுக்கு கிடைத்த மகத்தான வரவேற்புக்கு இடையே ஒரு கேம் இந்த அளவுக்கு மக்களிடையே அபிமானத்தை பெற்றிருக்கிறது என்பது நிச்சயம் அசாதாரணமான ஒன்றாகும்.

புனேவைச் சேர்ந்த சூப்பர் கேமிங் நிறுவனத்தால் மாஸ்க் கன் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு மல்டி பிளேயர் ஷூட்டிங் கேம் ஆகும். ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் என இரண்டு இயங்குதளங்களிலும் இந்த கேம் கிடைக்கிறது. 56 மில்லியன் பயனர்கள் இந்த கேமை விளையாடி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதனை கொண்டாடும் வகையில் வார இறுதி நாட்களில் 50 மணி நேர double XP மற்றும் gold in-game ஆஃபர்களை அந்நிறுவனம் தருவதாக அறிவித்துள்ளாது.

மாஸ்க் கன் கேமின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராபி ஜான் இது குறித்து கூறுகையில், “நாங்கள் மாஸ்க் கன் கேமை அறிமுகப்படுத்திய போது இந்த கேமுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்த கேம் மீது மக்கள் காட்டிய அன்பால் நாங்கள் வளர்ச்சியடைந்துள்ளோம். அவர்களின் பேராதரவால் 50 மில்லியன் யூசர்களை கடந்திருக்கிறோம். இந்த கேமுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பயனர்கள் உள்ளனர்” என ராபி ஜான் தெரிவித்தார்.

Also read:  டி20 உலகக் கோப்பைல இவர் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் – விராட் கோலியே சொல்லிட்டாரு!

2019ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த கேம் அறிமுகமானது. இது ஒரு ஆன்லைன் மல்டி பிளேயர் கேம் ஆகும். இந்த கேம் புனேவில் உள்ள பொறியாளர்களால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது என்பது சிறப்பாகும். இந்த கேமை மொத்தமாக 23 மில்லியன் மணி நேரங்கள் விளையாடி இருக்கின்றனர்.

2020ம் ஆண்டு பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட நேரத்தில் இந்தியர்கள் பலரும் மாஸ்க் கன் விளையாட்டுக்குள் வந்தனர் என முன்னர் ஊடக பேட்டியின் போது ராபி ஜான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by:Arun
First published:

Tags: Game Applications, Pubg game, Video Games