மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக்கை 2004ல் தொடங்கினார் . முதலில் ஹார்வர்ட் மாணவர்கள் ஆன்லைனில் இணையும் வகையில் உருவாக்கப்பட்ட இதில் பிற்காலத்தில் மற்ற பல்கலைகழக மாணவர்களும் இணைந்தனர். இப்போது ஃபேஸ்புக் உலகளாவிய தளமாக மாறிவிட்டது. 2.9 பில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்கள் உள்ளனர்.
வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று சமூக ஊடகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆப்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு மெட்டா நிறுவனம் ஒரு ஆலமரம் போல் திகழ்கிறது. இந்நிலையில் தற்போது மெட்டா நிருவத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனராக பதவி வகிக்கும் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக அதன் பட்ஜெட்டை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக மார்க் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக 4 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது பாதுகாப்பு பட்ஜெட் 14 மில்லியன் டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.115 கோடி ஆகும். முன்னதாக ரூ.33 கோடி செலவழிக்கப்பட்டது. மேலும் இந்த பட்ஜெட் அதிகரிப்பு என்பது அவசியமானது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு கொடுப்பனவு ஜுக்கர்பெர்க்கின் ஒட்டுமொத்த பாதுகாப்பு திட்ட செலவுகளை விட கூடுதலாக இருக்கும் என்றும் தற்போதைய சூழ்நிலையில் இது பொருத்தமானது மற்றும் அவசியமானது என்றும் மெட்டா விளக்கம் அளித்துள்ளது.
சம்பளம் எவ்வளவு?
ஃபோர்ப்ஸ் லிவிங் பில்லியனர் பட்டியலில் 16வது இடத்தில் உள்ள மார்க் ஜூக்கர்பெர்கரின் சொத்து மதிப்பு 63 பில்லியன் டாலர்கள். அதாவது ரூ.5.2 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது . 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, மார்க் ஜுக்கர்பெர்க் 27 மில்லியன் டாலர்களை சம்பளமாக பெற்றுள்ளார். இந்திய மதிப்பில் 223 கோடிகள் ஆகும். அதற்கு பின் அவரது சம்பளம் வெளியிடப்படவில்லை. ஆனால் நிச்சயம் அது 300 கோடியை ஒட்டி இருக்கும்.
கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது மெட்டா. இது உலகளாவிய தொழிலாளர்களில் 13 சதவீதத்தை பணிநீக்கம் செய்தது. வரும் வாரங்களில் மேலும் சிலரை வேலையை விட்டு அனுப்ப உள்ளது. இந்நிலையில் 2023க்கான பெரும்பாலான துறைகளுக்கான பட்ஜெட்டை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. பொதுவாக வருடத்தின் தொடக்கத்தில் ஒதுக்கீடுகள் இருக்கும். பட்ஜெட்டில் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், மேலும் பல வேலைகள் குறைப்பு குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன.
துறைகளின் பட்ஜெட் இன்னும் ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் மார்க் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்பு செலவுகள் குறித்த செய்தி வந்துள்ளதால் இது மக்களிடையே முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mark zuckerberg