முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / செவ்வாயில் நாளை தரையிறங்குகிறது நாசா விண்கலம்!

செவ்வாயில் நாளை தரையிறங்குகிறது நாசா விண்கலம்!

நாசா விண்கலம் இன்சைட்

நாசா விண்கலம் இன்சைட்

செவ்வாயின் உள்பகுதிகளை ஆழமாக ஆய்வு செய்வதற்காக InSight விண்கலம் என்ற விண்கலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கலிஃபோர்னியா நகரிலிருந்து செலுத்தப்பட்டது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

செவ்வாய் கிரகத்தை ஆழமாக ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள இன்சைட் (InSight) விண்கலம் நாளை தரையிறங்குகிறது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழுவதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு க்ரியூயாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் செவ்வாயின் உள்பகுதிகளை ஆழமாக ஆய்வு செய்வதற்காக இன்சைட் (InSight) விண்கலம் என்ற விண்கலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கலிஃபோர்னியா நகரிலிருந்து செலுத்தப்பட்டது.

நசாவால் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட இன்சைட் விண்கலம்

சுமார் 48 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ள இந்த விண்கலம் அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தரையிறங்குகிறது. சுமார் 8 நிமிடத்தில் செவ்வாயில் கால்பதிக்கும் விண்கலம், தரையில் துளையிட்டு உட்புற வெப்பநிலை குறித்து ஆய்வு செய்கிறது.

இதன்மூலம் செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் திரவங்கள் ஏதும் உள்ளதா அல்லது திடநிலையிலே உள்ளதா என தெரிய வரும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுகளை கொண்டு அடுத்து ஓராண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் அனுப்பப்படுவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also see... 

First published:

Tags: Spacecraft