Home /News /technology /

இந்தியாவில் பிக்ஸல் ஸ்மார்ட் ஃபோன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு வரும் கூகுள்!

இந்தியாவில் பிக்ஸல் ஸ்மார்ட் ஃபோன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு வரும் கூகுள்!

கூகுள் பிக்சல்

கூகுள் பிக்சல்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தியை இந்தியாவில் விரைவுபடுத்துகிறது என்ற செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில், ஐபோன்களை தொடர்ந்து பிக்ஸல் ஃபோன்கள் இந்தியாவில்  உற்பத்தி செய்யப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Inter, IndiaAmericaAmericaAmerica
    கூகுள் நிறுவனம் தனது பிக்ஸல் ஸ்மார்ட் ஃபோன்களின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டு உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தியை இந்தியாவில் விரைவுபடுத்துகிறது என்ற செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில், ஐபோன்களை தொடர்ந்து பிக்ஸல் ஃபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

    அமெரிக்காவை சேர்ந்த ஆன்லைன் நியூஸ் பேப்பர்  வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கூகுள் பிக்ஸல் ஸ்மார்ட் ஃபோன்களின் உற்பத்தியை இந்தியாவில் செய்வதற்கு கூகுள் நிறுவனம் பரிசீலித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    சீனாவில் அவ்வப்போது போது போட்டு வரும் லாக்டவுன்கள் டிவைஸ்களின் உற்பத்தி வேகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் தான் அசெம்பிளி ஆலைகளின் ஒரு பகுதியை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்ற கூகுள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    மேலும் இதுதொடர்பாக வெளியாகி இருக்கும் அறிக்கையில், பிக்ஸல் ஸ்மார்ட் ஃபோனின் 5 லட்சம் முதல் 10 லட்சம் யூனிட்களை அசெம்பிள் செய்ய இந்திய உற்பத்தியாளர்களிடம் கூகுள் ஏலங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டு கொண்டுள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.

    சீனாவில் வழக்கம் போல உற்பத்தி இருக்கும் அதே நேரத்தில் பிக்ஸஸ் ஸ்மார்ட் ஃபோனின் ஆண்டு உற்பத்தியில் 10-20 சதவீதத்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய சர்ச் எஞ்சின் நிறுவனமான கூகுள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல காரணங்களால் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இந்தியாவில் ப்ரீமியம் பிக்ஸல் போன்களை கூகுள் அறிமுகப்படுத்தவில்லை.

    ஒருவேளை இந்தியாவில் கூகுள் உற்பத்தியை துவக்கினால் மேலும் சில பிக்ஸல் ஃபோன்கள் வெளியாகலாம். மேலும் நாட்டில் பிக்ஸல் ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனையை மேம்படுத்தவும் இது உதவும். தவிர குறிப்பாக இந்திய சந்தையில் மற்ற ஆண்ட்ராய்டு போன்களை விட பிக்ஸல் ஃபோன்கள் விற்பனையில் மிகவும் பின்தங்கி தான் காணப்படுகின்றன.

    இவற்றை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய துவங்குவது விற்பனை வீதத்தை அதிகரிக்க உதவு கூடும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். எப்படி என்றால் பிக்ஸல் உற்பத்தி இந்தியாவிற்கு மாறினால், அது கூகுள் தனது ஸ்மார்ட் ஃபோன்களுக்கான இறக்குமதி வரியை தவிர்க்க உதவும், இதன் மூலம் விலையைக் குறைத்து, எதிர்காலத்தில் நாட்டில் பிக்ஸல் ஃபோன்களின் விற்பனையை அதிகரிக்கலாம்.

    கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை பரிசீலித்ததாக கூறப்படுகிறது, ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அறிக்கை கூறுகிறது.

    Read More: ஜியோ நிறுவனம் ஜூலை மாதத்தில் 29.4 லட்சம் புதிய பயனர்களைப் பெற்றுள்ளது - டிராய் தகவல்!

    இதற்கிடையில் ஆப்பிள் ஏற்கனவே ஒப்பந்த உற்பத்தி கூட்டாளர்களான ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் மூலம் இந்தியாவில் 4 மாடல்களை உருவாக்குகிறது. சமீபத்திய ஐபோன் 14, இந்தியாவில் தயாரிக்கப்பட வாய்ப்புள்ளது. புதிய ஐபோன் 14 சீரிஸை ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் 7 அன்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: Apple, Apple iphone, IPhone, Smartphone

    அடுத்த செய்தி