செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மிக நெருக்கத்தில் படம்பிடித்த மங்கள்யான்

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம்பிடித்து உள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மிக நெருக்கத்தில் படம்பிடித்த மங்கள்யான்
போபோஸை மிக நெருக்கத்தில் படம் பிடித்த மங்கள்யான்
  • Share this:
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான், சுமார் 10 மாத காலத்துக்கு பிறகு 2014 செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாயின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது.

இந்நிலையில், இந்த விண்கலம் 6 ஆண்டு காலத்தை வெற்றிகரமாக கடந்து இன்று செவ்வாய் கிரகத்தின் மிக நெருக்கமான மற்றும் மிகப்பெரிய நிலவான போபோஸின் படத்தை இஸ்ரோ மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் படம் பிடித்து உள்ளது.

ஜூலை 1ஆம் தேதி மார்ஸ் ஆர்பிடர் மிஷன் செவ்வாய் கிரகத்தில் இருந்து 7,200 கி.மீ தொலைவிலும், போபோஸிலிருந்து 4,200 கி.மீ தூரத்திலும் இருந்தபோது இந்த படம் எடுக்கப்பட்டது.இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, ஸ்டிக்னி, போபோஸின் மிகப்பெரிய பள்ளம் மற்றும் பிற பள்ளங்களும் இந்த படத்தில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading