• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Mi 10T Pro இல்லாவிட்டால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றவருக்கு அடித்தது ஜாக்பாட்

Mi 10T Pro இல்லாவிட்டால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றவருக்கு அடித்தது ஜாக்பாட்

Mi 10T Pro

Mi 10T Pro

Mi 10T மற்றும் Mi 10T Pro ஸ்மார்ட்போன்கள் கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த உலகளாவிய அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
"நீ எப்போ கல்யாணம் செஞ்சிக்கப்போற?" என்று எத்தனை முறை உங்கள் உறவினர்கள் உங்களிடம் கேள்வி கேட்டிருப்பாங்க. இதுபோன்ற சூழ்நிலையிலிருந்து தப்பிக்க உங்களிடம் சரியான மற்றும் பொருத்தமான பதில்கள் ஏதும் இருக்காது. சரி, இப்போது பின்வரும் ஒரு Mi ரசிகரிடமிருந்து மேலே குறிப்பிடப்பட்ட கேள்விக்கான வித்தியாசமான பதிலை காணுங்கள். 

Mi 10T Pro வாங்கும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று Mi ரசிகர் தன் உறவினர்களுக்கு பதிலளித்தார். இதற்கு Mi நிறுவனத்தின் ரிப்ளை என்ன தெரியுமா? அவர் உண்மையில் திருமணம் செய்துகொள்ள Mi ஸ்மார்ட்போனை விரும்பினாரா என்று அவரை தவிர வேறு யாருக்கும் தெரியாது. Mi தயாரிப்பின் ரசிகரான கமல் அஹமட் (Kamal Ahamad) டிசம்பர் 11 அன்று தனக்கு "Mi 10T Pro (sic) கிடைக்கும் வரை தான் திருமணம் செய்து கொள்ளபோவதில்லை" என்று ட்வீட் செய்தார். 

இதனை தொடர்ந்து பலரும் ஆச்சரியப்படும்படி டிசம்பர் 21 அன்று, அவர் விரும்பிய Mi 10T Proவை நிறுவனத்திடமிருந்து பெற்றார். அதோடு அவர் ட்விட்டரில் ஜியோமிக்கு (Xiaomi) நன்றியும் தெரிவித்தார். அவர் "இறுதியாக இந்த மான்ஸ்டரை பெற்றுவிட்டேன்" என குறிப்பிட்டுருந்தார். Mi 10T Pro டிஸ்பிளே உண்மையில் சுவாரஸ்யமாக இருக்கிறது. இது மிகவும் அழகான ஸ்மார்ட்போன். இது அற்புதமான #108MP flagship #Mi10TProவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பல அம்சங்களில் 40K இன் கீழ், # Mi10T Pro ஒரு நல்ல ஸ்மார்ட்போன் என்பதை பலர் அறிவர். 

ஜியோமி (Xiaomi) நிறுவனம் அந்த நபருக்கு Mi 10T Proவை இலவசமாகக் கொடுத்ததா? என்று இந்தியா டுடே டெக் (India Today Tech) சியோமியை அணுகியபோது, அதன் செய்தித் தொடர்பாளர், அவர் ஒரு Mi  ரசிகராக இருந்ததன் விளைவாக ஒரு புதிய ஸ்மார்ட்போனை பெற்றார். மேலும் அஹமட் மிகவும் அதிர்ஷ்டசாலி அவர் ஸ்மார்ட்போனுக்கான கூப்பனை வென்றுள்ளார். அவர் முன்னர் ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு பணத்தை சேமிப்பதில் மும்முரமாக இருந்தார். 

ஆனால் இப்போது அந்த சேமிப்பு பணத்தை அவர் தனது திருமணத்திற்கு செலவிட நல்ல வாய்ப்பை நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், அவரது நல்ல அதிஷ்டம் ஸ்மார்ட்போனுடன் முடிவடையவில்லை. ட்விட்டரில் அவரை வாழ்த்திய இந்தியாவின் ஜியோமி தலைவர் (Xiaomi India Head) மனு குமார் ஜெயினிடமிருந்தும் (Manu Kumar Jain) அவர் ஒரு பாசிட்டிவ் மெசேஜை பெற்றார், 

"ஹஹா! நீங்கள் இப்போது திருமணம் செய்து கொள்ளத் தயாராக உள்ளீர்கள் என்று நினைக்கிறேன் என  அவர் குறிப்பிட்டிருந்தார். ஒரு முக்கியமான குறிப்பில், # Mi10TPro அநேகமாக இந்தியாவின் சிறந்த முதன்மை ஸ்மார்ட்போனாக இப்போது உள்ளது. மேலும் இதை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன். தயவுசெய்து #108MP கேமராவை முயற்சி செய்து உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்"என்று மனு குமார் ட்வீட் செய்திருந்தார்.

Mi10T Pro அட்டகாசமான அம்சம் : 

ஜியோமி (Xiaomi) Mi 10T Pro 5G 6.67 இன்ச் ஃபுல்ஹெச்.டி + ஐபிஎஸ் எல்சிடி ஸ்கிரீனை (6.67-inch fullHD+ IPS LCD screen) 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் சப்போர்ட் செய்கிறது. டிஸ்பிளே 7 ஸ்டேப் அடாப்டிவ் ரீப்ரேஷ்  ரேட் டெக்னாலஜியைப் பயன்படுத்துகிறது, மேலும் இது வேகமாகவும், பிரகாசமாகவும் இருக்கிறது. ஹூட்டின் கீழ், ஸ்மார்ட்போன் 8GB ரேம் மற்றும் 256GB UFS 3.1 சேமிப்பகத்துடன் ஸ்னாப்டிராகன் 865 SoC ஐ இயக்குகிறது. பேட்டரியைப் பொறுத்தவரை, இது 33W வேகமான சார்ஜிங்கைக் கொண்ட 5000 எம்ஏஎச் பேக்கைக் கொண்டுவருகிறது. 

Also read... McDonald's உணவு வகைகளை இனி எளிதாக WhatsApp ஆப் மூலமே ஆர்டர் செய்யலாம்!

ஸ்மார்ட்போனின் கேமராக்களைப் பொறுத்தவரை, கமல் அஹமட் தனது திருமண படப்பிடிப்பை இந்த ஸ்மார்ட்போனிலேயே பயன்படுத்தப்படுவார் என்று மனு வாக்குறுதியளித்திருக்கிறார். Mi 10T Pro, 108 மெகாபிக்சல் முதன்மை லென்ஸ் கேமரா அடிப்படையிலான அமைப்பைப் பெறுகிறது, இதில் 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் லென்ஸ்கள் உள்ளன. அதோடு கூட ஆப்டிகல் உறுதிப்படுத்தல், 8k  வீடியோ பதிவு, இரட்டை வீடியோ முறை மற்றும் பல அம்சங்களுக்கான 

Mi 10T மற்றும் Mi 10T Pro ஸ்மார்ட்போன்கள் கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த உலகளாவிய அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் Mi 10 மற்றும் Mi 10 Pro மாடல்களை பின்பற்றுகின்றன. இப்போது புதிதாக அறிமுகமான Mi 10T மற்றும் Mi 10T Pro ஆகியவை ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர்களால் இயக்கப்படுகின்றன. மேலும் இவை ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புகளுடன் வருகின்றன. மேலும் இந்த இரண்டு மாடல்களும் ஹை ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளேக்களை கொண்டுள்ளன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: