அமேசான் நிறுவனத்திடம் ரூ.30 லட்சம் மோசடி...! பலே போலி ‘ஐ.டி’ ஆசாமி கைது

Amazon.com சேவைகள் நிறுவனம்

பொருள் டெலிவரி ஆனவுடன் அப்பொருளை உள்ளூர் சந்தையில் விற்றுவிடுவார். அமேசானில் ஆர்டர் செய்த பொருள் வரவில்லை எனப் புகார் அளித்து செலுத்திய பணத்தையும் திரும்பப் பெற்றுள்ளார் இந்த ஆசாமி.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் அமேசான் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் போலி கணக்குத் தொடங்கி சுமார் 30 லட்சம் ரூபாய்க்கு மோசடி செய்துள்ளார்.

இந்தூரைச் சேர்ந்தவர் முகமது மவுலா. அமேசான் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் போலியான இ-மெயில் ஐடி மற்றும் மொபைல் எண் கொடுத்து போலியான கணக்கு தொடங்கி உள்ளார். இதன் பின்னர் அமேசான் தளத்தில் விலை உயர்வான ஸ்மார்ட்ஃபோன்கள், ஹெட்ஃபோன்ஸ், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், ரவுட்டர் எனப் பலப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.

பொருள் டெலிவரி ஆனவுடன் அப்பொருளை உள்ளூர் சந்தையில் விற்றுவிடுவார். அமேசானில் ஆர்டர் செய்த பொருள் வரவில்லை எனப் புகார் அளித்து செலுத்திய பணத்தையும் திரும்பப் பெற்றுள்ளார் இந்த ஆசாமி. தொடர்ந்து தவறு நடப்பதை அறிந்து அமேசான் சைபர் செல்-ல் அளித்த புகாரின் பெயரில் முகமது மவுலா கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸார் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சுமார் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. விலை உயர்ந்த 50-க்கும் மேற்பட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் முகமதுவிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த மோசடியில் அமேசான் ஊழியர் ஒருவரையும் போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

மேலும் பார்க்க: மீண்டும் ஊருக்குள் நுழைந்த சின்னத்தம்பி...
Published by:Rahini M
First published: