Home /News /technology /

உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் மால்வேர் அகற்றுவது எப்படி!

உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் மால்வேர் அகற்றுவது எப்படி!

Malware

Malware

மால்வேர் பாதிப்பு ஏற்படும் போது, அதை முழுவதுமாக அகற்ற நல்ல ஆன்டி-மால்வேர் ஆப் தேவைப்படும். எப்படி கணினியில் ஏற்படும் வைரஸ் பாதிப்பை நீக்க ஆன்டி-வைரஸ் சாப்ட்வேர் செயல்படுகிறதோ, அதே போல ஆன்டி-மால்வேர் செயலி செயல்படும்.

அனைத்து ஆண்ட்ராய்டு ஃபோன்களிலும் வைரஸ் அல்லது மால்வேர் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், பிரவுசர் பயன்படுத்தும் போது அல்லது மால்வேர் பாதிப்பு உள்ள செயலிகளை பதிவிறக்கி பயன்படுத்தும்போதோ ஸ்மார்ட்போனும் பாதிக்கப்படும். உங்கள் போனின் வேகம் குறையும் போது, அடிக்கடி உறைந்து போகும்போது, அல்லது பாப்-அப் விளம்பரங்கள் தோன்றும் போது, உங்கள் மொபைல் மால்வேர் மாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். ஆண்ட்ராய்டு ஃபோனில் மால்வேர் அகற்றுவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Anti-malware செயலியை டவுன்லோடு செய்யவும் :

மால்வேர் பாதிப்பு ஏற்படும் போது, அதை முழுவதுமாக அகற்ற நல்ல ஆன்டி-மால்வேர் ஆப் தேவைப்படும். எப்படி கணினியில் ஏற்படும் வைரஸ் பாதிப்பை நீக்க ஆன்டி-வைரஸ் சாப்ட்வேர் செயல்படுகிறதோ, அதே போல ஆன்டி-மால்வேர் செயலி செயல்படும். கூகுள் பிளேஸ்டோரில் ஆன்டி-மால்வேர் என்று தேடும்போது சிறந்த செயலிகள் முதலில் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் அதிக ரேட்டிங் உள்ள மால்வேரை பதிவிறக்கலாம். மால்வேர்பைட்ஸ் என்ற செயலி சிறந்த ஆன்டி-மால்வேராகக் கருதப்படுகிறது.

Also read:  மணிதர்களுக்கு அதிகம் தென்படாத அரிய வகை சிறுத்தை நாகாலந்தில் கண்டுபிடிப்பு!

ஆன்டி-மால்வேர் செயலியை இயக்கும் முன் உங்கள் ஃபோனின் டேட்டாவை பேக்கப் செய்யுங்கள் :

எப்போதுமே நீங்கள் உங்கள் புதுப்பிக்கும் போது அல்லது வைரஸ் புரோகிராமை இயக்குவதற்கு முன்னர், போனில் உள்ள டேட்டாவை பேக்கப் எடுத்துக் கொள்வது நல்லது. சில நேரங்களில், ஆன்டி-மால்வேர் செயலி உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட முக்கியமான மீடியா கோப்புகளை அழித்துவிடலாம்.

ஆன்டி-மால்வேர் செட்-அப் :

ஒவ்வொரு செயலியை டவுன்லோடு செய்த பின்பும், அதை இன்ஸ்டால் செய்யும் போது, பல்வேறு அனுமதிகளைக் கேட்கும். ஆன்டி-மால்வேர் செயலியை இன்ஸ்டால் செய்யும் போது, ‘FILE PERMISSIONS’ அனைத்தையும் வழங்கவும். அப்போது தான் உங்கள் போனை முழுவதுமாக ஸ்கேன் செய்து மால்வேரை முழுவதுமாக நீக்க முடியும்.

சில மால்வேர், குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இலவசமாக வழங்கப்படும். நீங்கள் இன்ஸ்டால் செய்யும் போது அந்த ஆப்ஷன் வந்தால், இலவச வெர்ஷனை பயன்படுத்துங்கள்.

Also read:  மைக் ஆன்-ல் இருந்தது தெரியாமல் ரகசியம் பேசி சிக்கிய பாஜக எம்.பி..

உங்கள் மொபைல் சாதனத்தை ஸ்கேன் செய்யவும் :

ஆன்டி-மால்வேர் செயலியை வெற்றிகரமாக இன்ஸ்டால் செய்து, செட்-அப் செய்து முடித்த பின்னர், உங்கள் சாதனத்தை ஸ்கேன் செய்யவும். ‘Scan your device’ என்று ஆன்டி-மால்வேர் செயலியின் முகப்புத் திரையில் தோன்றும் ஆப்ஷனை கிளிக் செய்து, ஸ்கேன் செய்யத் தொடங்குங்கள்.

உங்கள் ஸ்மார்ட்போன் முழுவதும் ஸ்கேன் செய்யப்படுவதற்கு பல நிமிடங்கள் ஆகலாம். போனில் ஸ்கேன் செய்யப்படும் ஒவ்வொரு பகுதியும் திரையில் காண்பிக்கப்படும். அதுமட்டுமின்றி, எவ்வளவு சதவிகிதம் ஸ்கேன் ஆகியுள்ளது மற்றும் எவ்வளவு மிச்சம் உள்ளது என்பதையும் பார்க்கலாம்.

அதிகபட்சமாக, ஸ்கேன் முடிவதற்கு 10 நிமிடங்கள் ஆகலாம். ஆன்டி-மால்வேர் ஸ்கேன் செய்யும் போது, நீங்கள் போனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

Also read:  இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் டேக்ஸி சேவை - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

ஸ்கேன் முடிவுகள் :

ஆன்டி-மால்வேர் உங்கள் சாதனத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து முடித்தபின்னர், ஸ்கேனின் முடிவுகள் திரையில் தோன்றும். எந்த செயலிகள், கோப்புகள் அல்லது ஃபோல்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை முடிவுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமின்றி, போனை பாதிக்ககூடியவற்றையும் ஆன்டி-மால்வேர் செயலி தனியே காட்டும். சில நேரங்களில் உங்கள் ஃபோனில் பாதிப்பு எதுவும் இல்லாமல் இருந்தாலும், அதுவும் ஸ்கேன் முடிவுகளில் தெரியும்.

Threat found (மொபைல் போனை பாதிக்கக்கூடிய மால்வேர்) :

ஸ்கேன் முடிவுகளில் உங்கள் டேட்டாவை அக்சஸ் செய்யும், அச்சுறுத்தக்கூடிய மால்வேர் அல்லது threat ஏதேனும் இருந்தால், அதைப் பற்றிய விவரங்கள் திரையில் காண்பிக்கப்படும். நீங்கள் அந்த அச்சுறுத்தல்களை உடனடியாக நீக்கலாம்.
Published by:Arun
First published:

Tags: Android, Android Apps, Mobile phone, Technology

அடுத்த செய்தி