இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொபைல் நிறுவனங்களில் பல சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பிராண்டுகள் ஆகும். சில வாரங்களுக்கு முன்பு வரி ஏய்ப்பு என்று சீன பிராண்டுகள் மீது புகார்கள் எழுந்தன. சில ஆயிரம் முதல் லட்ச ரூபாய்க்கு மேல் மொபைல் போன் விற்பனை ஆனாலும், ஒரு சில பிராண்டுக்கு என்று தனி மதிப்பு உள்ளது. அதில் முக்கியமானது ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள். ஆப்பிள் தயாரிப்புகள் என்றாலும் அவை சீனாவில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆப்பிளின் புதிய மாடலான ஐபோன் 14 இன்னும் சில நாட்களில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் இந்தியாவிலேயே ஐபோன் 14 தயாரிக்க இருக்கிறது என்ற செய்தி வெளியானது. மேக் இன் இந்தியா இந்த கூற்றை நிரூபிக்கும் அளவுக்கு ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய உற்பத்தி ஆலையைத் தொடங்கினால் சீனாவில் தயார் செய்யப்படும் ஆப்பிள் தயாரிப்புகள் நிலை என்ன? ஏற்கனவே ஐபோன் 14 விற்பனைக்கு தயாராகி வரும் நிலையில் அந்த மொபைல்கள் விற்பனை செய்யப்படுமா என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
ஆப்பிள் நிறுவனம் இது சார்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட்ட பிறகு சீனாவில் தயாரிக்கப்பட்ட மாடல்கள் விற்பனை செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் தயார் செய்யப்பட்ட ஐபோன் 14 மொபைல்களும் விற்பனை செய்யப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையில், ஆப்பிளின் சீன தயாரிப்பு விற்பனைக்கு அறிமுகம் செய்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் தயார் செய்யப்படும் ஐபோன் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கு துரிதமான வேலைகள் நடந்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. பொதுவாக 6 – 9 மாதங்கள் தேவைப்படும் உற்பத்தி நேரத்தை குறைத்து விரைவாக அனைத்து ஃபோன்களையும் உற்பத்தி செய்யும் அளவுக்கு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளது. ஆப்பிள் நிறுவனம் நீண்ட காலமாக சீனாவில் தயாரிக்கப்படாத, உற்பத்தியை தொடங்க வேண்டும் என திட்டமிட்டுகொண்டிருந்தது. எனவே இந்த மாற்றம் ஆப்பிளின் மிகப்பெரிய மைல்கல் என்றே கூறலாம்.
Also Read : அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்.. தோசை பிரிண்ட் செய்யும் இயந்திரம் தெரியுமா மக்களே!
தற்போது இந்தியாவில் ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் என்ற மூன்று ஆப்பிள் சப்ளையர்களால் ஆப்பிள் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த மூன்று சப்ளை நிறுவனங்களுமே அரசாங்கம் அறிவித்துள்ள பிரொடக்ஷன் லிங்க்டு இன்சென்டிவ், அதாவது தயாரிப்புடன் இணைந்த ஊக்கத்தொகை என்ற திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த ஊக்கத் தொகை பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் 8000 கோடி ரூபாய் மதிப்புள்ள தயாரிப்புகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் ஆப்பிள் தன்னுடைய உற்பத்தி ஆலையை இந்தியாவில் தொடங்குவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஃபால் நிகழ்வில் ஐபோன் அறிமுகமாக இருப்பதைத் தொடர்ந்து, இந்தியாவில் ஃபோன்களின் உற்பத்தி அக்டோபர் மாதம் முடிவடையும் என்றும், நவம்பரில் இந்திய ஐபோன் விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apple, Apple iphone, Made in India, Technology