பசிபிக் பெருங்கடலில் மிதக்கும் குப்பைகளில் 90 சதவீதத்துக்கு அதிகமானவை 6 நாடுகளில் இருந்து மட்டுமே வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த பூமியின் மிக பெரிய பெருங்கடலாக அழைக்கப்படுவது பசிபிக் பெருங்கடல். அகண்டு விரிந்து காணப்படும் இதில் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குறிப்பாக கடந்த நூற்றாண்டில் பிளாஸ்டிக் குப்பையின் அளவு என்பது அதிகரித்துள்ளது. ஜப்பான் மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளில் இருந்து பெரும்பாலான குப்பைகள் வருவதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
பகுப்பாய்வு மற்றும் முறையான மாதிரிகளுக்குப் பிறகு, ஓஷன் கிளீனப் திட்டம் மற்றும் வாகெனிங்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு வியாழன் (செப்டம்பர் 1) அவர்களின் அறிக்கையை சயின்ஸ் ரிப்போர்ட் இதழில் வெளியிட்டது.
அந்த அறிக்கையில் வட பசிபிக் பெருங்கடலில் உள்ள துணை வெப்பமண்டல கடல் சுழற்சி பகுதி தற்போது பல்லாயிரக்கணக்கான டன் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளால் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
செவ்வாய், வெள்ளி கிரகத்தில் தரையிறங்குவதற்கான தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ
குப்பைகள் மில்லியன் கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சிதறிக்கிடக்கின்றன. குப்பைகள் குவிந்துள்ள மண்டலம் 'வடக்கு பசிபிக் குப்பை இணைப்பு' (North Pacific Garbage Patch- NPGP) என குறிப்பிடப்படுகிறது.
முன்னதாக, பிளாஸ்டிக்கின் பரவலான பயன்பாடு மற்றும் அவற்றை கடல் பரப்பில் அப்புறப்படுத்துவதால், உலகளாவிய கடல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதற்கான அறிகுறியாக கடல் பகுதிகள் எவ்வாறு படிப்படியாக குப்பைத் தொட்டியாக மாறியுள்ளது என்பதை வல்லுநர்கள் ஆராய்ந்தனர்.
குப்பையின் பெரும்பகுதி மீன்பிடி வலைகள் மற்றும் கயிறுகளால் ஆனது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், மீதமுள்ளவை பெரும்பாலும் கடினமான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் துண்டுகளால் ஆனது.
பிளாஸ்டிக் அதன் தோற்றத்திற்கான அடையாளம் காணக்கூடிய ஆதாரங்களைக் கொண்டிருக்கும். இது பிளாஸ்டிக் எங்கிருந்து தோன்றியது என்பதை நிபுணர்கள் கண்டறிய உதவுகிறது.
பாரம்பரிய முறைப்படி பங்களாதேஷ் காதலியை மணந்த சென்னை பெண்
புதிய ஆராய்ச்சியில், விஞ்ஞானிகள் 2019 ஆம் ஆண்டில் தி ஓஷன் கிளீனப் அமைப்பின் உதவியுடன் சேகரிக்கப்பட்ட சுமார் 573 கிலோகிராம் உலர் கடின பிளாஸ்டிக் குப்பைகளை ஆய்வு செய்தனர்.
232 பொருள்களின் பிறப்பிடத்தை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அதில் அதிகபட்சமாக ஜப்பானில் இருந்து 33.6% , சீனா 32.3%, தென் கொரியா 9.9%, அமெரிக்கா 6.5%, தைவான் 5.6% மற்றும் கனடா 4.7% குப்பைகளைக் கொண்டிருந்தது
பகுப்பாய்வின் போது, கால் பகுதிக்கும் அதிகமான குப்பைகள் 'கைவிடப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட மீன்பிடி சாதனங்கன்(ALDFG) என கண்டறிந்தனர். ஆராய்ச்சியாளர்களின் கணக்கீடுகளின்படி, NPGP இல் உள்ள குப்பைகள் மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து வருவதை விட 10 மடங்கு அதிகமாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Plastic pollution, Plastics