Home /News /technology /

டிஜிட்டல் தடயங்களை ஹேக்கர்களிடம் சிக்காமல் பாதுகாக்க உதவும் 5 யோசனைகள்.! 

டிஜிட்டல் தடயங்களை ஹேக்கர்களிடம் சிக்காமல் பாதுகாக்க உதவும் 5 யோசனைகள்.! 

டிஜிட்டல்

டிஜிட்டல்

Digital Hackers | புதுப்புது டெக்னிக்குகள், மோசடி முறைகளைப் பின்பற்றி டிஜிட்டல் அடையாளங்களை திருடும் ஹேக்கர்கள் கும்பலிடம் இருந்து அதனை பாதுக்காக்க உதவும் 5 வழிமுறைகள் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மத்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ பிரச்சாரத்தின் மூலமாக மெட்ரோ நகரங்கள் முதல் பட்டி தொட்டிகள் வரை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, ஆவணங்களை டிஜி லாக்கரில் சேகரிப்பது, யுபிஐ பயன்பாடு உள்ளிட்ட அனைத்து விதமான டிஜிட்டல் முறைகளையும் மக்கள் வேக வேகமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்திய மக்கள் டிஜிட்டல் முறைக்கு மாறி வரும் அதேவேளையில், ஒவ்வொரு ஆண்டும் சைபர் குற்றங்களின் சதவீதமும் அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட என்சிஆர்பி 2021 அறிக்கையின்படி, இந்தியாவில் 52,974 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 5 சதவீதமாகவும், 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 15 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒருவர் தனது டிஜிட்டல் அடையாளங்களை பாதுகாப்பதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதலாக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புதுப்புது டெக்னிக்குகள், மோசடி முறைகளைப் பின்பற்றி டிஜிட்டல் அடையாளங்களை திருடும் ஹேக்கர்கள் கும்பலிடம் இருந்து அதனை பாதுகாக்க உதவும் 5 வழிமுறைகள் இதோ...பழைய, பயனற்ற கணக்குகளை நீக்குதல்:

நாளுக்கு நாள் பெருகி வரும் ஆன்லைன் பயன்பாடு நம்மை புதிய ஆப்கள், புதிய இணையதளங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யத்தூண்டும். அப்படி தேவையில்லாமல் தனிப்பட்ட தகவல்களை கொடுத்து பதிவு செய்து, நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத மெயில் ஐ.டி, ஷாப்பிங் ஆப் அக்கவுண்ட், சோசியல் மீடியா அக்கவுண்ட்களை உடனடியாக Shift+Delete கொடுத்து நிரந்தரமாக டெலிட் செய்யுங்கள். பயன்பாட்டில் இல்லாத Yahoo, Rediffmail ஆகியவற்றின் மின்னஞ்சல், ஷாப்பிங் மற்றும் டிக்கெட் புக்கிங் இணையதளங்கள் ஆகியவற்றில் உள்ள அக்கவுண்ட்டை நீக்குவது எப்படி என AccountKiller.com அல்லது JustDeleteMe ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Also Read : பிழை கண்டுபிடித்தால் ₹25 லட்சம் வரை பரிசு.. கூகுள் பலே திட்டம்!

ஹேக்கிங் குறித்து சோதிக்கவும்: 

Haveibeenpwned என்ற டூலைப் பயன்படுத்தி உங்கள் தகவல்கள் எப்போதாவது ஹேக் செய்யப்பட்டுள்ளதா அல்லது ஹேக் செய்வதற்கான முயற்சி நடந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். ஒருவேளை உங்கள் தகவல்கள் திருடப்பட்டிருந்தால், எந்த மாதிரியான தகவல்கள் திருடப்பட்டுள்ளன என்பதை சரி பார்த்து அது சம்பந்தமான டிஜிட்டல் அடையாளங்கள் மற்றும் கணக்குகளை நீக்க வேண்டும்.சோசியல் மீடியா ஹிஸ்டரி:

ஹேக்கர்கள் உங்களைப் பற்றி கூகுளில் தேடினால் அவை படங்கள் மற்றும் பதிவுகளைக் காட்டக்கூடும். எனவே ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் எப்போதோ ஷேர் செய்த தேவையில்லாத பதிவுகள், மதிப்பை குறைக்ககூடிய புகைப்படங்கள் ஆகியவற்றை நீக்குவது நல்லது. ட்வீட்டைப் பொறுத்தவரை பழைய ட்வீட் மற்றும் போட்டோக்களை மொத்தமாக நீக்க முடியாது என்றாலும், சில ஆப்கள் மற்றும் மூன்றாம் தரப்பு சேவைகளைப் பயன்படுத்தி அதனை நீக்கலாம். ஃபேஸ்புக்கைப் பொறுத்தவரை "செட்டிங் & தனியுரிமை" (Settings & Privacy) என்ற ஆப்ஷனுக்குள் சென்று, "செயல்பாட்டுப் பதிவு" (Activity log) சரியானவற்றைத் தவிர பிற பதிவுகளை நீக்கலாம்.

Also Read : 2.7 கோடி பதிவுகளை நீக்கிய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் - மெட்டா நிறுவனம் அறிக்கை.!

சாப்ட்வேர் அண்ட் ஆப் அப்டேட்:

கணினி, ஸ்மார்ட் போன், லேப்டாப் என உங்களுடைய சுய விவரங்கள், சோசியல் மீடியா அக்கவுண்ட்கள் அடங்கியுள்ள அனைத்து மின்னணு சாதனங்களையும் அவ்வப்போது அப்டேட் செய்யவும். குறிப்பாக அடிக்கடி பயன்படுத்தக்கூடிய ஆப்கள், பாதுகாப்பு மென்பொருள், சர்ச் இன்ஜின் டூல்கள் ஆகியவற்றை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்வது, ஹேக்கர்கள் அதில் உள்ள பாதுகாப்பு ஓட்டையைப் பயன்படுத்தி ஹேக் செய்வதை தடுக்க உதவும்.பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் பயன்பாடு:

வங்கி கணக்குகள், தனிப்பட்ட தகவல்கள், முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் கையொப்பம், சொத்து விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களை ஸ்மார்ட்போன், லேப்டாப், கம்யூட்டர், மெயில் போன்றவற்றில் சேகரித்து வைப்பதற்கு பதிலாக ஃபென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் போன்ற எக்ஸ்ட்ரானிக்ஸ் கருவிகளில் சேமித்து வைப்பது ஹேக்கர்களிடம் இருந்து கூடுதல் பாதுகாப்பு தரும்.

Also Read : நாளொன்றுக்கு 2GB டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ்..! ஜியோவின் சூப்பர் பிளான்ஸ்

ஆன்லைன் யுகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு செயலையும் மிகுந்த கவனம் மற்றும் எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும். இணையதளங்கள், சோசியல் மீடியாக்களை லாகின் செய்யும் போது "ஆம், நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்பதை கிளிக் செய்வதற்கு முன்னதாக விதிமுறைகளை தெளிவாக படித்துப்பார்க்க வேண்டும். தனிப்பட்ட தகவல்களை பகிர்வதற்கு முன்பு விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.
Published by:Selvi M
First published:

Tags: Digital Transaction, Technology

அடுத்த செய்தி