• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் 4G ஸ்மார்ட்போன்களுக்கு உலக சந்தையில் செம டிமாண்ட்... என்ன ப்ராண்ட் தெரியுமா?

பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் 4G ஸ்மார்ட்போன்களுக்கு உலக சந்தையில் செம டிமாண்ட்... என்ன ப்ராண்ட் தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

இனோவி டெலிகாம் பிரைவேட் லிமிடெட் (Inovi Telecom Pvt Ltd) நிறுவனம் தான் பாகிஸ்தானில் ஸ்மார்ட்போங்களை தயாரித்து வருகிறது.

  • Share this:
சீனா, கோரியா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பாகிஸ்தான் பெரிய அளவில் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. அங்குள்ள மொபைல் நிறுவனம் சமீபத்தில் பாகிஸ்தானில் தயாரித்த முதல் ஸ்மார்ட்போன் தொகுப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) ஏற்றுமதி செய்துள்ளது. தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன்களை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் எந்தெந்த நாடுகளுக்குச் ஏற்றுமதி செய்யப்படுகின்றன? அதன் விலை என்ன? உள்ளிட்ட பல விவரங்களை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

பாகிஸ்தானில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் நிறுவனம் எது?

இனோவி டெலிகாம் பிரைவேட் லிமிடெட் (Inovi Telecom Pvt Ltd) நிறுவனம் தான் பாகிஸ்தானில் ஸ்மார்ட்போங்களை தயாரித்து வருகிறது. கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் இனோவி டெலிகாம் நிறுவனத்திற்கு மொபைல் சாதனைகளை உற்பத்தி செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அதன் முதல் ஏற்றுமதி ஆர்டரை வெறும் நான்கு மாதங்களுக்குள் நிறுவனம் நிறைவேற்றியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட்போன் பிராண்டுகள் என்ன?

இனோவி டெலிகாமின் தலைமை நிர்வாக அதிகாரி ஜீஷன் மியான் நூர் கூறியதாவது, "எங்கள் நிறுவனம் சீன பிராண்டுகளை உற்பத்தி செய்கிறது" என்று கூறினார். ஆனால் அவர்கள் உற்பத்தி செய்யும் பிராண்டுகளின் பெயர்களை வெளியிடவில்லை.

பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களை எந்த நாடுகள் வாங்குகின்றன?

தற்போது வரை, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 4G ஸ்மார்ட்போன்களின் 5,500 மொபைல் செட்களின் முதல் தொகுப்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி மியான் நூர் கூறுகையில், ஈராக், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் குறைந்த விலை சந்தைகளில் ஊடுருவுவதே நிறுவனத்தின் முக்கிய இலக்கு என்று கூறியுள்ளார்.

இந்த ஸ்மார்ட்போன்களின் விலை எவ்வளவு?

சரியான விலை விவரங்கள் எதுவும் இல்லை என்றாலும், நிறுவனம் ஈராக், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள வாடிக்கையாளர்களை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் $ 100 வரையிலான விலை கொண்ட மொபைல்களை வாங்க விரும்புகிறார்கள்.

Also read... உங்கள் லேப்டாப் பேட்டரி வழக்கத்தை விட வேகமாக குறைகிறதா? அதை சரிசெய்யும் வழிகள்!

பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம்:

இனோவி டெலிகாமின் இந்த சாதனையை பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் பாராட்டியதோடு, ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆணையத்தின் கட்டுப்பாட்டாளர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, " நாட்டில் மொபைல் சாதன உற்பத்தி சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவு தான் இது" என்று கூறியிருந்தார்.

பாகிஸ்தானில் அசெம்பிள் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்:

ட்ரிபியூனில் வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தானின் போர்ட் காசிமில் உள்ள ஆட்டோமொபைல் ஆலையில் சாம்சங் மொபைல் போன்களை தயாரிக்க சாம்சங் கல்ஃப் எலெக்ட்ரானிக்ஸ் லக்கி மோட்டார் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் செய்தது. இது குறித்து டெக்னோ பேக் டெலிகாம் சிஇஓ அமீர் அல்லவாலா, தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனிடம் பேசுகையில், பாகிஸ்தானில் ஏற்கனவே உற்பத்தி செய்யும் பிராண்டுகளில் டெக்னோ, இன்பினிக்ஸ், ஐடெல், விவோ, ஒப்போ மற்றும் ரியல்மி ஆகியவை அடங்கும். அதே நேரத்தில் நோக்கியா இந்த மாதம் செப்டம்பருக்குள் ஒரு ஆலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: