இந்தியாவில் உருவான ஜியோபிரவுசர் செயலி! பாதுகாப்பு அம்சங்களுடன் எளிமையாக இணையத்தில் உலவலாம்

இந்தியாவில் உருவான ஜியோபிரவுசர் செயலி! பாதுகாப்பு அம்சங்களுடன் எளிமையாக இணையத்தில் உலவலாம்
ஜியோபிரவுசர்
  • News18 Tamil
  • Last Updated: September 22, 2020, 5:38 PM IST
  • Share this:
கூகுள் க்ரோம், மைக்ரோசாப்ட் எட்ஜ், ஒபேரா உள்ளிட்ட பிரவுசர்களுக்கு போட்டியாக ஜியோபிரவுசர் வெளியாகியுள்ளது. ஆன்டிராய்ட் போனுக்கான ஜியோ பிரவுசர் பீட்டா பதிப்பை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த பிரவுசரை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.

சீன செயலிகளை தடை விதித்ததிலிருந்து மத்திய அரசு, இந்திய செயலிகளை ஊக்குவித்து வருகிறது. அதன் படி, இந்திய தயாரிப்பான ஜியோபிரவுசர் செயலி, இந்திய இணைய பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளது. சீன செயலியான யூசி பிரவுசர் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பயனர்களின் தேவையை நிறைவேற்றும் அம்சங்களோடு ஜியோபிரவுசர் களம் இறங்கியுள்ளது.

ஜியோபிரவுசரின் முக்கிய அம்சங்களாக பாதுகாப்பு வசதிகளுடன் பிரவுஸ் செய்யும் வசதி உள்ளது. அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை எளிமையாக அணுகவும், வீடியோக்களை துல்லியமாக பார்க்கவும், கேம்களை விளையாடவும் ஏதுவாக ஜியோபிரவுசர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading