ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்களுக்கு எப்போதுமே தனி கிராக்கி உள்ளது. அதன் புது அப்டேட்கள் வருவதற்கு முன்னரே வாடிக்கையாளர்கள் காத்திருந்து வாங்கிச் செல்கிறார்கள். கொரோனாவின் மூன்றாவது அலை சீனாவில் ஏற்பட்டு ஐ-போன்கள் உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் உலக அளவில் ஐ-போன்களுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஐ-போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கும் முயற்சியில் டாடா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
வாகன உற்பத்தி, மென்பொருள் நிறுவனம், விமான போக்குவரத்து சேவை என பல துறைகளில் கால் பரப்பி வெற்றிகரமாக திகழந்து வரும் டாடா நிறுவனம் அடுத்ததாக செல்போன் தயாரிப்பிலும் இறங்க முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் ஐ-போன்கள் தைவானின் தொழில்நுட்ப ஜாம்பவான்களான விஸ்ட்ரான் மற்றும் ஃபாக்ஸகான் போன்ற நிறுவனங்களில் தான் அசெம்பிள் செய்யப்படுகின்றன. இந்நிலையில் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் முன்னனியில் இருக்கும் சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் சர்வதேச நிறுவனங்களை நிறுவும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு படி தான் டாடா நிறுவனத்தின் முயற்சி.
கொரோனா கட்டுப்பாடுகளால் சீனாவில் ஐ –போன் தயாரிப்பு பணிகள் முடங்கியுள்ளன. இந்த நேரத்தில் ஐ-போன் தயாரிக்கும் வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் டாடா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் உள்ளது என்றும் வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் டாடா நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உலக அளவில் மிகவும் பிரபலலமான ஆப்பிள் நிறுவனம் ஐ-போன் தயாரிப்பிற்காக சீனாவை பெரிய அளவில் நம்பி இருப்பதை விரும்பவில்லை.
பெங்களூருவில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் ஏற்கனவே விஸ்ட்ரானின் ஐ-போன் தொழிற்சாலை இயங்கி வருகிறது. 2.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இரண்டாயிரம் பொறியாளர்கள் மற்றும் 10,000 ஊழியர்களுடன் பிரம்மாண்டமாக இயங்கி வரும் அந்த தொழிற்சாலையை டாடா தன்வசப்படுத்தினால் விஸ்ட்ரான் நிறுவனம் சர்வீஸ் பார்ட்னராக தொடர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தோடு வர்த்தக ரீதியிலான உறவை வலுப்படுத்தும் முயற்சியாக இந்திய முழுவதும் 100 ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க உள்ளதாக ஏற்கனவே டாடா நிறுவனம் அறிவித்திருந்தது. அதன் முதல் கிளை மும்பையில் அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.