இன்று சந்திர கிரகணம் : இந்தியாவில் எந்த நேரத்தில் நிகழும்? எப்போது காணலாம்?

Lunar Eclipse 2020 | ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் சந்திர கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியும்.

இன்று சந்திர கிரகணம் : இந்தியாவில் எந்த நேரத்தில் நிகழும்? எப்போது காணலாம்?
சந்திர கிரகணம்
  • Share this:
2020-ம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இன்று மற்றும் நாளை இடைப்பட்ட இரவில் நிகழவுள்ளது.

சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். இந்திய நேரப்படி இன்று இரவு 11.15 மணி முதல், நாளை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும். வானிலையில் எந்த மாற்றமின்றி தெளிவாக இருக்கும்பட்சத்தில் இந்தியாவில் இதனை முழுமையாக காண முடியும்.


ஆனால் இன்று நடைபெறுவது முழுமையான சந்திர கிரகணம் அல்ல.

இந்த கிரகணத்தின் போது சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை.

கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் புறநிழல் மட்டுமே சந்திரனின் மீது விழும். இதே போன்ற புறநிழல் நிலவு மறைப்பு எனப்படும் சந்திர கிரகணம்தான் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதியும் நிகழ்ந்தது என்பது குறிப்பிடதக்கது.
First published: June 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading