Lunar Eclipse 2020 : சந்திர கிரகணத்தின் போது செய்யவேண்டியது, செய்யக்கூடாதது என்ன?
Lunar Eclipse 2020 | அறிவியலின்படி சந்திரகிரகணத்தால் எந்த பாதிப்புமில்லையென்றாலும் இந்திய புராணங்களின் படி பல்வேறு அறிவுறுத்தல்கள் கூறப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம்
- News18 Tamil
- Last Updated: June 5, 2020, 9:41 AM IST
2020-ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இன்று மற்றும் நாளை இடைப்பட்ட இரவில் நிகழவுள்ளது.
சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். இந்திய நேரப்படி இன்று இரவு 11.15 மணி முதல், நாளை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும். வானிலையில் எந்த மாற்றமின்றி தெளிவாக இருக்கும்படசத்தில் இந்தியாவில் இதனை முழுமையாக காண முடியும். சந்திர கிரகணத்தின் போது செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது:
அறிவியலின் படி சந்திர கிரகணம் என்பது எந்த பாதிப்புமற்ற பாதுகாப்பான ஒன்று. எனவே சந்திர கிரகணத்தை பார்க்க எந்த முன்னெச்சரிக்கை மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் ஏதும் தேவையில்லை.
இருப்பினும் இந்திய புராணத்தின் படி சந்திர கிரகணத்தின் போது பல்வேறு அறிவுரைகள் மற்றும் செய்யக்கூடாதவை என்று சில விஷயங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி சந்திர கிரகணத்தின் போது காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால், கிரகணத்தின் போது ஏற்படும் தீமையின் தாக்கத்திலிருந்து விலக முடியும். உணவுப்பொருட்களில் துளசி இலையை சேர்ப்பது மற்றவர்களுக்கு யாசகம் வழங்குவது போன்றவற்றை செய்யலாம்.மேலும் சந்திர கிரகணத்தின் போது உணவு உட்கொள்ள கூடாது. கிரகணம் ஆரம்பிக்கும் 3 மணி நேரத்திற்கு முன் உணவு எடுத்து கொள்ள வேண்டும். இந்தியாவின் பழமையான மரபுப்படி கிரகண நேரத்தின் போது வெளியே செல்லக்கூடாது.
Also Read : இன்று சந்திர கிரகணம் : இந்தியாவில் எந்த நேரத்தில் நிகழும்? எப்போது காணலாம்?
சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். இந்திய நேரப்படி இன்று இரவு 11.15 மணி முதல், நாளை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும். வானிலையில் எந்த மாற்றமின்றி தெளிவாக இருக்கும்படசத்தில் இந்தியாவில் இதனை முழுமையாக காண முடியும்.