நாம் அனைவரும் நமது தினசரி பரிவர்த்தனைகளுக்கு UPI மற்றும் ஆன்லைன் பேமென்ட் முறைகளை நம்பியிருப்பதால் நமது வங்கி விவரங்கள் ஆன்லைன் ஸ்கேமர்களால் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், ஸ்மார்ட் ஃபோன் திருடர்கள் நமது பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை திருடுவதை எளிதாக்குகிறது. ஸ்மார்ட் ஃபோனை குறி வைத்து திருடுபவர்கள் கைகளில் உங்கள் மொபைல் கிடைத்தவுடன் உங்கள் பேங்க் அக்கவுண்ட் விவரங்கள் மற்றும் இ-வாலட்ஸ்களை அணுகி உங்கள் பணத்தை திருடலாம். அதே போல ஸ்மார்ட் ஃபோன் திருடர்கள் அதை திருடுவது விற்பதற்காக அல்ல, யூசர்களின் பேங்க் விவரங்களையும் பணத்தையும் பெறுவதற்காகவே என்று காவல் அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவேளை உங்கள் ஸ்மார்ட் ஃபோன் திருடப்பட்டால் உங்கள் பேங்க் அக்கவுண்ட் விவரங்கள் மற்றும் பரிவர்த்தனை விவரங்களை நீங்கள் பாதுகாப்பது அவசியமாகிறது. உங்கள் ஃபோனை இழந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் இங்கே உள்ளன...
உங்கள் சிம் கார்டை பிளாக் செய்யுங்கள்..
உங்கள் மொபைலை திருடியவன் உங்கள் ஃபோன் நம்பரை தவறாக பயன்படுத்தாமல் இருக்க, உங்கள் சிம் கார்டை பிளாக் செய்வது என்பது முதல் மற்றும் முக்கிய படியாகும். சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநரின் கஸ்டமர் கேரை அழைத்து மொபைல் திருட்டு குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவித்து உங்கள் மொபைல் நம்பரை டீஆக்டிவேட் செய்ய சொல்லுங்கள். சிம் கார்டை பிளாக் செய்வது OTP-க்கள் மூலம் அணுக கூடிய மொபைலில் உள்ள UPI/பேமென்ட் ஆப்ஸ் உட்பட ஒவ்வொரு ஆப்ஸையும் திருடன் பயன்படுத்துவதை தடுக்கும். இதற்கு சிறிது நேரம் ஆனாலும் உங்கள் பிரைவசி மற்றும் மொபைல் வாலட்கள் பாதுகாக்கப்படும்.
இதையும் படியுங்கள்... முதன் முறையாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வாங்கியிருப்போர் தெரிந்துக்கொள்ள வேண்டியது என்ன.?
UPI பேமென்ட்டை டீஆக்டிவேட் செய்யவும்:
உங்கள் ஃபோனை கண்டுபிடிக்க தாமதமானால் UPI பேமென்ட்டை டீஆக்டிவேட் செய்யவும். ஏனென்றால் உங்கள் மொபைலை திருடியவன் முக்கிய அம்சமான UPI பேமேன்டை பயன்படுத்த முயற்சிக்கலாம். இதனால் நீங்கள் பெரிய அளவிலான நிதி இழப்பை சந்திக்கலாம். எனவே ஒரு சிறிய தாமதம் உங்களுக்கு அதிக இழப்பை ஏற்படுத்தலாம்.
எல்லா மொபைல் வாலட்களையும் பிளாக் செய்யவும்:
Amazon Pay, Google Pay, PhonePay, FreeCharge மற்றும் Paytm போன்ற இ-வாலட்டுகள் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளன.ஆனால் உங்கள் மொபைல் தவறான கைகளுக்கு சென்றால் அதிக விலை கொடுக்க நேரிடும். ஃபோன் காணாமல் போன உடனேயே சம்பந்தப்பட்ட ஆப்ஸின் ஹெல்ப் சென்டரை தொடர்பு கொண்டு நீங்கள் மீண்டும் வாலட்களை செட்டப் செய்யும் வரை அக்ஸஸை தடுக்கும்ப டி அவர்களிடம் கேட்டு கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்.. ஜிமெயில், யூடியூப் மற்றும் ஜிபே-யில் சிக்கலா? கூகுள் சப்போர்ட்டை தொடர்பு கொள்வது எப்படி.?
காவல்துறையை அணுகுங்கள்:
மொபைல் தொலைந்தால் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று உங்கள் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்று திருட்டு புகாரை பதிவு செய்யுங்கள். மேலும் FIR காப்பியை கேளுங்கள். உங்கள் மொபைல் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது உங்கள் பணம் திருடப்பட்டாலோ அவற்றை ஆதாரமாக பயன்படுத்துங்கள்.
Tags: Mobile banking, Mobile phone, Smart Phone