ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

சிறந்த கேமிங் ஃபோனை வாங்க விரும்புகிறீர்களா? ரூ.19,000 விலையில் ஆரம்பமாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ!

சிறந்த கேமிங் ஃபோனை வாங்க விரும்புகிறீர்களா? ரூ.19,000 விலையில் ஆரம்பமாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ!

கோப்புப் படம்

கோப்புப் படம்

உலகம் முழுவதும் பல விருப்பங்கள் மற்றும் வகைகளில் எண்ணற்ற ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

  • News18
  • 3 minute read
  • Last Updated :

உலகம் முழுவதும் பல விருப்பங்கள் மற்றும் வகைகளில் எண்ணற்ற ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றில் சில போன்கள் மட்டுமே கேமிங் வசதி கொண்டவையாக இருக்கின்றன. அந்த வகையில், நாட்டில் விற்பனையாகவும் சிறந்த கேமிங் தொலைபேசிகள் மற்றும் அவற்றின் விலை விவரங்கள் குறித்து காண்போம்.

போகோ எக்ஸ்3 ப்ரோ (Poco X3 Pro):

போக்கோ எக்ஸ் 3 ப்ரோவின் விலை ரூ.18,999 ஆகும். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 செயலியைக் கொண்டுள்ளது. இதே விலை வரம்பில் விற்பனையாகும் வேறு சில தொலைபேசிகள் வழங்கும் சிப்செட்களை விட இது சக்தி வாய்ந்தது. இதுதவிர 5,160 எம்ஏஎச் பேட்டரி, 33 டபிள்யூ ஃபாஸ்ட் சார்ஜர், டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரிப்ஃபிரஷ் ரேட், HDR10 சான்றிதழ் மற்றும் கார்னிங் கொரில்லா 6 பாதுகாப்புடன் 6.67 அங்குல முழு எச்டி + அமோலேட் டிஸ்ப்ளே ஆகிய அம்சங்கள் இதில் உள்ளன.

சியோமி மி 10i (Xiaomi Mi 10i) :

நீங்கள் ஒரு போகோ தொலைபேசியை வாங்க விரும்பவில்லை என்றால், சியோமியின் மி 10i என்பது போகோ எக்ஸ் 3 ப்ரோவுக்கு ஒரு நல்ல மாற்றாக அமையும். மேலும் இதன் விலை ரூ.20,999 ஆகும். இது ஒரு சக்திவாய்ந்த இடைப்பட்ட செயலியை வழங்குகிறது. எனவே இதன் செயல்திறனில் எந்த சிக்கலும் இருக்காது. இந்த சாதனம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் சிங்க் ரிப்ஃபிரஷ் ரேட் டிஸ்பிளே மற்றும் இன்பில்ட் கூலிங் சிஸ்டம் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது 8nm- அடிப்படையிலான குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அட்ரினோ 619 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 108 எம்.பி குவாட் ரியர் கேமரா அமைப்பு, 4,820 எம்ஏஎச் பேட்டரி 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் (OnePlus Nord):

இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.25,999 ஆகும். குவால்காமின் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC இலிருந்து இடைப்பட்ட 5 ஜி தொலைபேசி சக்தியை ஈர்க்கிறது. இதில் கிராபிக்கல் விளையாட்டுகளை நன்றாக கையாள முடியும். இந்த தொலைபேசி 90 ஹெர்ட்ஸ் ரிப்ஃபிரஷ் ரேட்டுடன் 6.44 அங்குல முழு எச்டி + அமோலேட் டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்சன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதனுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் பெறலாம். இது சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குகிறது. ஒன்பிளஸின் முக்கிய விற்பனைக்கு காரணமாக இருப்பது OxygenOS ஆகும். இது உங்களுக்கு சிறந்த ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்கும். ஒன்பிளஸ் நோர்ட் 30W சார்ஜரை ஆதரிக்கும் 4,115 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ (Realme X7 Pro):

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ உங்களுக்கு மிகச்சிறந்த செயல்திறனை வழங்கும். இதன் விலை ரூ .29,999 ஆகும். இதில் ரிசோர்ஸ்-ஹெவி கேம்ஸ்களை விளையாடும் போது உங்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது. ஜென்ஷின் இம்பாக்ட், அஷ்பால்ட்9, சப்வே சர்ஃபர்ஸ் போன்ற விளையாட்டுக்கள் இதில் அடங்கும். இந்த சாதனத்தில் மீடியாடெக்கின் முதன்மை டைமன்சிட்டி 1000+ செயலி, 64 எம்.பி குவாட் ரியர் கேமரா அமைப்பு, டால்பி அட்மோஸுக்கு ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் ரிப்ஃபிரஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் மற்றும் 1,200nits உச்ச பிரகாசத்துடன் 6.55 அங்குல முழு எச்டி + அமோலேட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

விவோ வி 20 ப்ரோ (Vivo V20 Pro):

இது பிளிப்கார்ட்டில் ரூ.29,990-க்கு கிடைக்கிறது. இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி செயலியை வழங்குகிறது. இது மேலே குறிப்பிடப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் போனையும் இயக்குகிறது. இந்த 5 ஜி தொலைபேசியில் 6.44 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே உள்ளது. அதிக ரிப்ஃபிரஷ் ரேட்டிற்க்கு எந்த ஆதரவும் இல்லை மற்றும் சாதனம் நிலையான 60 ஹெர்ட்ஸ் பேனலைக் கொண்டுள்ளது. தொலைபேசியின் பின்புறத்தில், 64MP சென்சார் உட்பட மூன்று கேமராக்களைக் காணலாம். செல்ஃபிக்களுக்கு, நீங்கள் 44MP + 8MP டூயல் பிரண்ட் பேசிங் கேமராக்களைப் பெறுவீர்கள். ஹூட்டின் கீழ், ஒரு நிலையான 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. நிறுவனம் 33W வேகமான சார்ஜரை சாதனத்துடன் தொகுக்கிறது.

Also read... மலிவான விலையில் பிராட்பேண்ட் வசதியை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் நெட்ஒர்க்குகள்: முழு விவரம்!

ஒன்பிளஸ் 9 ஆர் / ஒன்பிளஸ் 8 டி (OnePlus 9R/OnePlus 8T):

இதுதவிர நீங்கள் ஒன்பிளஸ் 8டி அல்லது ஒன்பிளஸ் 9ஆர் போன்களை வாங்கலாம். மேலும் அவை இரண்டிலும் ஒரே மாதிரியான செயல்திறன் இருக்கிறது. ஒன்பிளஸ் 8டி விலை ரூ.42,999, ஆனால் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டுகளில் இதற்கு ரூ.3,000 தள்ளுபடியை பெறலாம். இதன் பொருள் நீங்கள் அதை ரூ.39,999-க்கு பெறலாம். அதேபோல ஒன்பிளஸ் 9ஆர் சமீபத்தில் இந்தியாவில் ரூ.39,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சாதனங்கள் 65W சார்ஜர், ஸ்னாப்டிராகன் 800 சீரிஸ் செயலி மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரிப்ஃபிரஷ் ரேட் மற்றும் எச்டிஆர் 10 + சான்றிதழ் கொண்ட AMOLED டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இதனுடன் நீங்கள் 48MP குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 4,500mAh பேட்டரியையும் பெறுவீர்கள்.

இதுதவிர, ஆசஸ் ஆர்ஓஜி போன்3 (Asus ROG Phone 3), சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி (Samsung Galaxy S20 FE 5G), ஒன்பிளஸ் 9 (OnePlus 9), ஐபோன் 12 சீரிஸ் (iPhone 12 series) ஆகிய ஸ்மார்ட்போன்களும் உங்களுக்கு சிறந்த கேமிங் அனுபவத்தை தருகின்றன. இவற்றின் விலை முறையே ரூ .41,999, ரூ .47,999, ரூ .49,999 மற்றும் ரூ.63,990 ஆகும்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Smart Phone