ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறுவது பயன் தருமா?

ஃபேஸ்புக் தளத்தைவிட்டு விலகி இருப்பவர்களின் மனநிலை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வை மேற்கொண்ட ஜெர்மனி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறுவது பயன் தருமா?
ஃபேஸ்புக்
  • News18
  • Last Updated: March 14, 2020, 1:10 PM IST
  • Share this:
சமூக வலைதளங்களில் நாம் அன்றாடம் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்தாலே பாதி மன அழுத்தம் குறையுமாம். குறிப்பாக ஃபேஸ்புக் தளத்தைவிட்டு விலகியிருப்பது நாம் அன்றாடம் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறதாம்.

மனித குணங்களும் கணினியும் என்ற ஆய்வின் அடிப்படையில் ஃபேஸ்புக் தளத்தைவிட்டு விலகி இருப்பவர்களின் மனநிலை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வை மேற்கொண்ட ஜெர்மனி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக 286 பேரிடம் முதற்கட்ட ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் மனநிலை ஆரோக்கியமானதாகவும் நடவடிக்கைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் நிருபணம் ஆகியுள்ளது. வாழ்க்கை மீதான பிடிப்பு அவர்களிடம் அதிகரித்துக் காணப்பட்டதாம். மேலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் திருப்தி உள்ளவர்களாகவும் இருந்துள்ளனர்.


அதிகமாக ஃபேஸ்புக் பயன்படுத்துவோரும் ஒரு இரண்டு வார காலம் அந்தத் தளத்தைவிட்டு விலகியிருந்தால் அவர்களது மனநிலையில் அதிரடி மாற்றங்கள் தெரிவதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: கொரோனா குறித்த சந்தேகங்கள்: உதவும் வாட்ஸ்அப் ’ஹெல்ப்லைன்’ மொபைல் எண்!


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading