ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

2022-ல் அதிக இன்டர்நெட் யூஸர்களை கொண்டுள்ள 10 நாடுகளின் பட்டியல்.!

2022-ல் அதிக இன்டர்நெட் யூஸர்களை கொண்டுள்ள 10 நாடுகளின் பட்டியல்.!

இன்டர்நெட் யூஸர்

இன்டர்நெட் யூஸர்

Internet Users | தற்போது உலகம் முழுவதும் சுமார் 5.07 பில்லியன் இன்டர்நெட் யூஸர்கள் இருக்கின்றனர். 2022-ஆம் ஆண்டில் அதிக இன்டர்நெட் யூஸர்களை கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியல் இங்கே...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீபத்திய நிலவரப்படி உலகளவில் அதிக இன்டர்நெட் யூஸர்களை கொண்ட நாடுகளில் சீனா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 5.07 பில்லியன் இன்டர்நெட் யூஸர்கள் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை உலகின் மொத்த மக்கள் தொகையில் 63.5% ஆகும்.

இதில் அதிக இன்டர்நெட் யூஸர்களை கொண்ட முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். உலக மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, ஜனவரி 2022-ஆம் ஆண்டில் நாட்டில் 658 மில்லியன் இன்டர்நெட் யூஸர்கள் இருந்தனர். மக்கள் தொகையில் நம்மை விட முன்னணியில் உள்ள காரணத்தால் அதிக எண்ணிக்கையிலான இன்டர்நெட் யூஸர்கள் கொண்ட பட்டியலில் சீனா முதலிடத்தில் இருக்கிறது.

அதே போல உலகளவில் பிராந்தியத்தின்படி இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கையில் அப்பட்டமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. கிழக்கு ஆசியாவில் 1.16 பில்லியன் இன்டர்நெட் யூஸர்கள் உள்ளனர், அதே நேரத்தில் ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் யூஸர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பட்டியலில் சீனா முதலிடத்தில் இருக்கும் நிலையில், இன்டர்நெட்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2022-ஆம் ஆண்டில் அதிக இன்டர்நெட் யூஸர்களை கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியல் இங்கே...

சீனா:

உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட (1.45 பில்லியன்) முதல் நாடான சீனாவில், சமீபத்திய நிலவரப்படி சுமார் 1.02 பில்லியன் இன்டர்நெட் யூஸர்கள் இருக்கிறார்கள்.

இந்தியா:

உலகிலேயே இரண்டாவது மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஜனவரி 2022-ல் சுமார் 658 மில்லியன் இன்டர்நெட் யூஸர்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் அறிக்கை, நாட்டில் தற்போது 692 மில்லியன் இன்டர்நெட்  யூஸர்கள் உள்ளனர் என்று கூறி இருக்கிறது.

Also Read : சோசியல் மீடியாக்களுக்கு மத்திய அரசு வைத்த செக்... இன்னும் 3 மாசம் தான் கெடு.!

அமெரிக்கா:

ஜனவரி 2022 நிலவரப்படி அமெரிக்காவில் சுமார் 307.2 மில்லியன் இன்டர்நெட் யூஸர்கள் இருக்கின்றனர். இந்நாட்டின் இணைய ஊடுருவல் விகிதம் (Internet penetration rate), நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 92 சதவீதமாக உள்ளது.

இந்தோனேசியா:

ஜனவரி 2022 நிலவரப்படி இந்தோனேசியாவின் மொத்த மக்கள் தொகையான 277.7 மில்லியனுடன் ஒப்பிடுகையில், அங்கு சுமார் 204.7 மில்லியன் இன்டர்நெட் யூஸர்கள் இருக்கிறார்கள்.

பிரேசில்:

நடப்பாண்டில் துவக்கத்தில் இந்த நாடு 165.3 மில்லியன் இன்டர்நெட் யூஸர்களை கொண்டிருந்தது. இது அந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 77% இணைய ஊடுருவல் விகிதத்தை கொண்டுள்ளது.

ரஷ்யா:

ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகை 145.9 மில்லியனாக உள்ள நிலையில், ஜனவரி 2022 நிலவரப்படி அந்நாட்டின் இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கை 129.8 மில்லியன் ஆகும்.

Also Read : ரூ.15,000 பட்ஜெட்டிற்கும் கீழ் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்..!

ஜப்பான்:

94% இணைய ஊடுருவல் விகிதத்துடன் ஜப்பான் 118.3 மில்லியன் இன்டர்நெட் யூஸர்களை கொண்டுள்ளது.

நைஜீரியா:

நைஜீரியாவில் உள்ள இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கை 109.2 மில்லியனாக இருக்கிறது.

மெக்சிகோ:

மெக்சிகோவின் மொத்த மக்கள் தொகை 130.9 மில்லியனாக இருக்கும் நேரத்தில் அங்கிருக்கும் இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கை 96.87 மில்லியன் ஆகும்.

ஜெர்மனி:

93% இணைய ஊடுருவல் விகிதத்துடன் ஜெர்மனி 78.02 மில்லியன் இன்டர்நெட் யூஸர்களை கொண்டிருக்கிறது.

Published by:Selvi M
First published:

Tags: Internet, Tamil News, Technology