நோக்கியா பிராண்டட் போன்களை தயாரிப்பதற்கான உரிமம் பெற்றுள்ள HMD Global நிறுவனம், இந்தியாவில் அதன் சமீபத்திய பட்ஜெட் மொபைலான Nokia C31 என்ற புதிய ஸ்மார்ட் ஃபோனை அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Nokia C31 கடந்த செப்டம்பரில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச மார்க்கெட்களில் வெளியிடப்பட்டது. இந்த மலிவு விலை நோக்கியா ஸ்மார்ட் ஃபோன் 3 மூன்று பின்புற கேமராக்கள், 6.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஆக்டா-கோர் SoC ப்ராசஸர் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வருகிறது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 12-ல் இயங்குகிறது.
இந்தியாவில் Nokia C31 ஃபோன்களின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை : பெரும்பாலான ஸ்மார்ட் ஃபோன்களை போலவே புதிய Nokia C31 மொபைலானது 3GB ரேம் + 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட 2 வேரியன்ட் ஆப்ஷன்களில் வருகிறது. பேஸ் வேரியன்டான 3GB ரேம் + 32GB மொபைலின் விலை ரூ.9,999 மற்றும் 4GB ரேம் + 64GB மொபைலின் விலை ரூ.10,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் நோக்கியாவின் புதிய Nokia C31-ஐ வாங்க விரும்பினால், Nokia-வின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில் வாங்கலாம்.
Read More : அடக்கமான விலை.. அட்டகாசமான வசதிகள்.. ரியல்மி அறிமுகப்படுத்திய புதிய ஸ்மார்ட்போன்..!
ஸ்பெசிஃபிகேஷன்ஸ் : Nokia C31 மொபைலானது 1600 x 720 ரெசல்யூஷன் கொண்ட 6.74-இன்ச் LCD ஸ்கிரீனை கொண்டுள்ளது. டிஸ்ப்ளே வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் மற்றும் 2.5டி கிளாஸ் ப்ரொட்டக்ஷனை கொண்டுள்ளது. இந்த ஃபோன் 1.6Hz பீக் ஸ்பீட் ஆக்டா கோர் யூனிசோக் ப்ராசஸ்ர் (octa-core Unisoc processor) மூலம் இயக்கப்படுகிறது. Nokia C31 மொபைலானது பின்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் கூடிய 13 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. மொபைலின் முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக 5 மெகாபிக்சல் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதன் ரியர் கேமராக்கள் போர்ட்ரெய்ட் மோட், எச்டிஆர் மற்றும் நைட் மோட் உள்ளிட்ட பல்வேறு கேமரா மோட்ஸ்களுக்கான சப்போர்ட்டை வழங்குகின்றன. இந்த மொபைல் 5,050 mAh பேட்டரியை கொண்டுள்ளது மற்றும் 10W வயர்டு சார்ஜிங் மூலம் சப்போர்ட் செய்யப்படுகிறது. இது வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்பிற்காக IP52 ரேட்டிங் பெற்றுள்ளது. HMD Global இரண்டு வருட காலாண்டு செக்யூரிட்டி அப்டேட்ஸ் மற்றும் ஒரு வருட ரீப்ளேஸ் வாரண்டியை உறுதியளிக்கிறது.
Nokia C31ம் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் Wi-Fi 802.11 b/g/n, GPS, AGPS, Galileo, Bluetooth v4.2, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ-USB போர்ட் உள்ளிட்டவை அடங்கும். இந்த ஃபோனில் அங்கீகாரத்திற்காக ரியர்-மவுன்ட் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மொபைல் ஒருமுறை சார்ஜ் செய்தால் மூன்று நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த மொபைல் 200 கிராம் எடை கொண்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nokia, Smart Phone, Technology