முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / வீனஸில் உயிர்கள் இல்லை - கேம்பிரிட்ஜ் ஆய்வு முடிவு!

வீனஸில் உயிர்கள் இல்லை - கேம்பிரிட்ஜ் ஆய்வு முடிவு!

வீனஸில் உயிர்கள் இல்லை

வீனஸில் உயிர்கள் இல்லை

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்ட சமீபத்திய  ஆய்வு அறிக்கையில் வீனஸில் உயிர்கள் இல்லை என்று முடிவு செய்துள்ளது. 

  • Last Updated :

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்ட சமீபத்திய  ஆய்வு அறிக்கையில் வீனஸில் உயிர்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பூமியின் சகோதரி என அழைக்கப்படுவது வெள்ளி. அளவில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் இப்படி அழைக்கப்படுகிறது. சூரிய குடும்பத்தில் இரண்டாவதாக இருக்கும் வெள்ளி பூமியை விட சூரியனுக்கு அருகில் இருந்தாலும் அதீத வெப்பம் கொண்ட கோலாக இருக்காது. அதற்கு காரணம் அதை சுற்றி உள்ள அடர்த்தியான மேகங்களே. கந்தகம் மிகுந்து காணப்படும் மேகங்கள் இதை ஒரு போர்வை போல் போர்த்தி உள்ளது. வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பிற்கு நெருக்கமான மேகங்களில் சல்பர் டை ஆக்சைட்டின் செறிவு அதிகமாக உள்ளது. ஆனால் உயரம் போக போக அடர்த்தி  குறைகிறது. இதன் காரணமாக இந்த கோளில் உயிர்கள் வாழ சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கலாம் என்று நம்பப்பட்டது. அதற்கான ஆய்வுகளையும் உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்ற.

ர்யுகு சிறுகோளில் உயிர்களுக்கான சாத்தியக்கூறு! -ஜாக்ஸா ஆய்வு

அந்த வகையில் இங்கிலாந்தின் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தின் ஆய்வு முடிவுகளில், கிரகத்தில் நுண்ணுயிரிகள் வாழும் சாத்தியக்கூறுகள் ஏதும் தென்படவில்லை என்று கூறியுள்ளனர். ஒரு உயிர் வாழ்வதை அது உண்ணும் அல்லது வெளியேற்றும் பொருளுக்கான அறிகுறிகளை வைத்து கண்டுபிடிப்பர். ஆனால் வெள்ளியில் இது வரை நடந்த ஆய்வில் அப்படி இந்தத் தடயமும்  இல்லை என்று குறிப்பிடுகின்றனர். 

ஆய்வுக்காக, வீனஸில் இருக்கும் தடிமனான, கந்தகம் நிறைந்த மேகங்களின் உயிர் வேதியியலை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். சீன் ஜோர்டான், ஆலிவர் ஷார்ட்டில் மற்றும் பால் பி. ரிம்மர் ஆகிய மூன்று ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு வெள்ளியின் வேதியல் நிலைகளை வைத்து உயிர் ஆதாரங்களைத் தேடினர். மேகங்களில் கிடைக்கும் தனிமங்களை உண்ணு வாழும் உயிரினங்கள் குறித்தும் தேடினர்.

விண்கல்லை எரித்துச் சாம்பலாக்கிய சூரியன்!

வீனஸின் சல்பர் டை ஆக்சைடு நிறைந்த வளிமண்டலத்தில் எதிர்பார்க்கப்படும் இரசாயன எதிர்வினைகளை ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வு கூடத்தில் வடிவமைத்தனர். மேகங்களில் வாழும் நுண்ணுயிரிகளால் சல்பர் டை ஆக்சைடு உட்கொள்ளப்பட்டு  மறைந்து போகக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதினர். இருப்பினும், தங்கள் ஆய்விகூடத்தில் மாதிரிகளை இயக்கிய பிறகு, வேதியியல் ரீதியாக, இது சாத்தியப்படவில்லை என்று  கொண்டனர்.

கேம்பிரிட்ஜின் இன்ஸ்டிடியூட் ஆப் வானியல் நிறுவனத்தைச் சேர்ந்த சீன் ஜோர்டான், முதன்மையான ஆசிரியரான, ஜோர்டான், ஒரு கிரகத்தில் இருக்கும் மூலப் பொருட்களை வைத்து உயிர்கள் வாழ்ந்தால் குறிப்பிட்ட அந்த தனிமத்தின் அடர்த்தி குறையும். அது வேறு தனிமமாக மாறி உயிர்கள் வாழ ஏற்றதாக அந்த கோள் மாறும். இது தான் உயிர் வாழும் சாத்தியக்கூறு. ஆனால் வெள்ளியில் கந்தகம் அடர்த்தி ஒரு  சுழற்சி முறையில் அளவு குறையாமல் இருக்கிறது. இதனால் இங்கு உயிர்கள் ஏதும் வாழ்வதற்கான சாத்தியங்கள் தெரியவில்லை . வெள்ளியில் உயிர்கள் வாழ வாய்ப்பில்லை என்று தனது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார்.

First published:

Tags: Astronomy