Home /News /technology /

அடேங்கப்பா.. பென்ஸ் காரை விட விலை அதிகமான LG டிவி - இந்தியாவில் அறிமுகம்!

அடேங்கப்பா.. பென்ஸ் காரை விட விலை அதிகமான LG டிவி - இந்தியாவில் அறிமுகம்!

LG Rollable OLED TV

LG Rollable OLED TV

LG SIGNATURE OLED R | பல்வேறு வீட்டு உபயோக, எலக்ட்ரானிக் சாதனங்களை வழங்கி மக்களின் விருப்பமான நிறுவனமாக இருக்கும் LG, பென்ஸ் காரை விட விலை அதிகம் உள்ள டிவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் பொழுது போக்கு சாதனங்களை பொருத்தவரை ஒவ்வொரு நாளும் புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய அப்டேட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப அனைத்து விலை வரம்பிலும் அனைத்துத் தயாரிப்புகளும் கிடைக்கின்றன. ஆனாலும் நமக்குப் பிடித்தமான ஒரு சில பொருட்களின் விலையைக் கேட்கும் போது மலைப்பாக இருக்கும். பொழுதுபோக்கு மற்றும் வீட்டு உபயோக சாதனங்களில் முன்னணி நிறுவனமான LG யின் சமீபத்திய ஓஎல்இடி டிவியின் விலையைக் கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்!

பல்வேறு வீட்டு உபயோக, எலக்ட்ரானிக் சாதனங்களை வழங்கி மக்களின் விருப்பமான நிறுவனமாக இருக்கும் LG, பென்ஸ் காரை விட விலை அதிகம் உள்ள டிவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. LG நிறுவனம் தனது சிக்னேச்சர் OLED டிவியை குறைவான விலையில் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ள நிலையில், தற்பொழுது இந்தியாவில் புதிய ரோல் செய்யக்கூடிய OLED டிவியை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை ₹75,00,000 மட்டும் தான்! அதாவது ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் E-கிளாஸ் காரின் விலையை விட LGயின் இந்த டிவி விலை அதிகம். எனவே உலகமே இந்த டிவியில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை கூர்ந்து கவனிக்க தொடங்கி உள்ளது!

75 லட்ச ரூபாய்க்கு ஒரு டிவி வாங்கும்போது அதில் என்ன அம்சங்கள் எதிர்பார்ப்பீர்கள்? ரோலபில் OLED டிவி என்பது நீங்கள் டிவி பார்க்காத போது, தானாகவே ரோல் செய்து கொள்ளும். அதாவது, இந்த மாடல், மடித்து வைக்கக்கூடிய ஒரு டிவியாகும். இந்திய மார்க்கெட்டில் முதன்முறையாக LG நிறுவனம், ரோல் ஆகக் கூடிய ஒரு டிவியை வெளியிட்டுள்ளது.



ஒரு பக்கம் கிட்டத்தட்ட முக்கால் கோடி ரூபாய்க்கு ஒரு ஃபிளாக்ஷிப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ள LG நிறுவனம், அதே கேட்டகிரியில் அதாவது OLED டிவி வரிசையில் மிக மிகக் குறைந்த விலையிலும் டிவிக்களை அறிமுகம் செய்துள்ளது.

Also Read : புன்னகையித்தால் போதும் ஈசியாக பணம் செலுத்தலாம் - மாஸ்டர்கார்ட்டின் புதிய முயற்சி!

எல்ஜி நிறுவனம் இந்த புதிய OLED டிவி சீரிஸ்களில் இரண்டு புதிய அப்டேட்களை சேர்த்துள்ளது. இதில் 9 ஜென் 5 என்ற இன்டெல்லிஜன்ட் பிராசஸர் மற்றும் அற்பதமான கிளாரிட்டிக்கு தனித்துவமான பிக்ச்சர் அல்காரிதம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த டிவி 55 இன்ச் மற்றும் 65 என்று இரண்டு அளவுகளில் கிடைக்கின்றது. கூடுதலாக, webOS 22 சேர்க்கப்பட்டுள்ள்ளது. வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நபரும் தங்களுக்கென்று தனிப்பட் புரோஃபைலை உருவாக்கி, தனிப்பட்ட முறையில் விரும்பும் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.

Also Read : இன்வெர்டர் வாங்கும்போது இதையெல்லாம் அவசியம் கவனியுங்க.!

அது மட்டுமின்றி, இந்த OS மூலம் நீங்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளை பகிரலாம். கேம் ஆப்டிமைசிங் தேர்வுடன் வரும் இந்த டிவியை, விர்ச்சுவல் சாதனத்துடன் இணைத்து புதிய கேமிங் அனுபவங்களைத் தருகிறது. டிவியில் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட பல விதமான கேம்ஸ் உடன் வருகிறது. மொபைலில் இருப்பது போல, டார்க் மோடு ஆப்ஷனும் உள்ளது. LG நிறுவனம் தனது அனைத்து OLED டிவிக்களுக்குமே மிகச்சிறந்த பிக்சர் குவாலிட்டியை உறுதி செய்துள்ளது.

எல்ஜி நிறுவனத்தின் OLED டிவி வகையை ₹90,000 க்கு வாங்கலாம். அதாவது இந்த சீரிஸின் ஆரம்ப விலை ₹89,999 மற்றும் இதன் ஃபிளாக்ஷிப் சிக்னேச்சர் சாதனத்தின் விலை ₹75,00,000.
Published by:Selvi M
First published:

Tags: Technology

அடுத்த செய்தி