டிவியை ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்தால் கரண்ட் பில் ஏறும் | அதிர்ச்சித் தகவல்
டிவியை ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்தால் கரண்ட் பில் ஏறும் | அதிர்ச்சித் தகவல்
டிவியை ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்யக்கூடாது. ஏன்?
பெரும்பாலான வீடுகளில் நமக்குத் தெரியாமலேயே பெருமளவு மின்சாரம் விரையமாவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதனைத் தவிர்த்தால் பெருமளவு மின்சாரக் கட்டணத்தை சேமிக்க முடியும். எப்படி?
Electricity Bill: நீங்கள் வீட்டில் டிவி, ஏசியை ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்துவிட்டு, அப்படியே விட்டுவிடுபவரா? நீங்கள் ஒரு வருடத்திற்கு 1000 ரூபாய் வரை பயன்படுத்தாத மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்தலாம் என்று எச்சரித்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று.
பெரும்பாலான வீடுகளில் நாம் டிவியை ஆஃப் செய்துவிட்டு செட் ஆப் பாக்ஸை அப்படியே விட்டுவிடுவோம். அதே போல் டிவியை ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்துவிட்டு ஸ்விட்சை ஆஃப் செய்யாமல் விட்டுவிடுவோம்.
ஏசி உள்ள வீடுகளில் ஏசியின் ரிமோட்டை மட்டும் ஆஃப் செய்துவிட்டு, ஸ்டெபிளைஸரை அப்படியே விட்டுவிடுவோம். இவையனைத்தும் தேவையில்லாத மின்சார விரையத்திற்கு இட்டுச்செல்லும் என குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை சார் செயல்பாடுகள் அமைப்பின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் தற்போது ஒரு வீட்டில் குறைந்தபட்சம் மூன்று மொபைல் போன் சார்ஜர்கள் உள்ளன. அவையும் பெரும்பாலான நேரங்களில் பயன்பாட்டில் இல்லையென்றாலும் ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும். இவையும் மின்சார விரையத்திற்கு காரணமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இப்படி நாம் பயன்படுத்தாமல் விரையமாகும் மின்சாரத்திற்கு ஆங்கிலத்தில் வேம்பைர் பவர் என அழைக்கிறார்கள். அதாவது ‘காட்டேரி மின்சாரம்’.
இப்படி ஒரு வருடத்திற்கு ஒரு வீட்டில் பயன்படுத்தாத மின்சாரத்திற்காக 1000ரூபாய் வரை கட்டணமாக செலவிடப்படுகிறது. இதன் மூலம் சராசரியாக 174 யுனிட் மின்சாரம் விரையமாகிறது. இப்படி விரையமாகும் மின்சாரத்தை சேமித்தால் ஒரு வருடத்திற்கு 10 வாட் எல்ஈடி பல்புகள் இரண்டை தொடர்ச்சியாக எரிய விடலாம் அல்லது 1.5 டன் உயர்தர ஏசியை 116 மணிநேரம் தொடர்ச்சியாக ஓட விடலாம்.
இது குறித்து பேசியுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் பொறியாளர் “டிவி, மொபைல் போன் சார்ஜர்கள், ஏசி உள்ளிட்டவற்றை முழுமையாக ஆஃப் செய்யாமல் தேவையில்லாத மின்சாரம் விரையமாகிறது. இது நம் மின்சாரத்துறையின் டிரான்ஸ்பார்மர்களிலும் தேவையில்லாத சுமையை உண்டாக்குகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Saravana Siddharth
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.