ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

தொடரும் ஆட்குறைப்பு: 11,000 ஊழியர்களை நீக்க இருக்கும் மைக்ரோசாப்ட்

தொடரும் ஆட்குறைப்பு: 11,000 ஊழியர்களை நீக்க இருக்கும் மைக்ரோசாப்ட்

11,000 ஊழியர்களை நீக்க இருக்கும் மைக்ரோசாப்ட்

11,000 ஊழியர்களை நீக்க இருக்கும் மைக்ரோசாப்ட்

பணிநீக்கத்தால் பொறியியல் துறை மற்றும் மனித வளத் துறை மிகவும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • chennai |

பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் தனது நிறுவனத்தில் ஆட்குறைப்பு பணிகளை செய்து வருகிறது.  ட்விட்டர் நிறுவனம் சென்ற ஆண்டு முதல் அதன் 50 % ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அது மட்டுமின்றி  அமேசான், மெட்டா, அலிபாபா, ஜொமெட்டோ என பல முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பை செய்து வருகிறது.

சமீபத்தில் அமேசான் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. பணிநீக்கங்கள் தொடர்பான தகவல்கள் கசிந்ததை அடுத்து தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸியிடம் இருந்து இந்த அறிவிப்பு வந்தது.

அதை தொடர்ந்து தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது மொத்த பணியாளர்களில் சுமார் 5% பேரை நீக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  ஜூன் 30, 2022 நிலவரப்படி, மைக்ரோசாப்ட்  நிறுவனத்தில் 2,21,000 முழுநேர ஊழியர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் 1,22,000 பேர் அமெரிக்காவில் உள்ளனர் மற்றும் 99,000 பேர் சர்வதேச அளவில் பணிபுரிகின்றனர்.

இந்த மொத்த எண்ணிக்கையில் 5% என்பது சராசரியாக  11,000 பணியாட்களை குறிக்கும்.  இந்த பணிநீக்கத்தால் பொறியியல் துறை மற்றும் மனித வளத்துறை மிகவும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்குறைப்பு எண்ணிக்கைக்கான அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும்  மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்னும்  வழங்கவில்லை . இருப்பினும் இந்த ஆட்குறைப்பு செய்தி குறித்து நிறுவனம் எந்த மறுப்பு செய்தியும் வழங்கவில்லை.

முன்னதாக அக்டோபர் 2022 இல், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல பிரிவுகளில் சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த பணிநீக்கங்கள் மைக்ரோசாப்ட் ஷாப்பிங்மோடில் உள்ள 2,00,000 பணியாளர்களில் 1 சதவீதத்தை பாதித்தன. தற்போது அந்த எண்ணிக்கை 5% ஆக உயர உள்ளது.

First published:

Tags: Microsoft