ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Lava Blaze 5G: விரைவில் விற்பனைக்கு வர உள்ள இந்தியாவின் மலிவு விலை 5G ஸ்மார்ட் ஃபோன்

Lava Blaze 5G: விரைவில் விற்பனைக்கு வர உள்ள இந்தியாவின் மலிவு விலை 5G ஸ்மார்ட் ஃபோன்

லாவா 5G

லாவா 5G

Lava Blaze 5G Smartphone | நாட்டில் 5G சேவையை அறிமுகப்படுத்த டெலிகாம் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், லாவா நிறுவனம் தனது புதிய விலை மலிவான 5G ஸ்மார்ட்ஃபோனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய பட்ஜெட்டுக்கு ஏற்ற உள்நாட்டு ஸ்மார்ட்போன் பிராண்டான லாவா இன்டர்நேஷனல், Blaze 5G என்ற புதிய 5G மொபைலை India Mobile Congress நிகழ்வில் அறிவித்தது. இந்த 5G ஸ்மார்ட்ஃபோனுக்கான ப்ரீ-புக்கிங் இந்த ஆண்டு தீபாவளியன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லாவா இன்டர்நேஷனல் லிமிட்டெட்டின் பிரசிடென்ட் மற்றும் பிசினஸ் ஹெட்டான சுனில் ரெய்னா இது தொடர்பாக கூறுகையில், "நாட்டில் தயாரிக்கப்படுவதில் விலை மலிவான 5G ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது எப்போதுமே எங்கள் விருப்பமாக உள்ளது. அடுத்த தலைமுறை 5G தொழில்நுட்பத்தை இந்தியர்களுக்கு மலிவு விலையில் வழங்க வேண்டும் என்ற பெரிய பார்வையுடன் எங்களது இந்த தயாரிப்பு தொடர்புடையது" என்றார்.

மேலும் பேசி இருக்கும் சுனில் ரெய்னா " எங்களது Lava Blaze 5G மொபைலானது தொழில்நுட்ப உலகில் இந்தியா வல்லரசாக உருவெடுக்க வேண்டும் என்று கனவில் உள்ள ஒவ்வொரு இந்திய ஸ்மார்ட் ஃபோன் யூஸருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மொபைலின் அறிமுகம் மூலம் 5G தொழில்நுட்பத்தின் சக்தியை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுகிறோம்" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் லாவாவின் புதிய Blaze 5G மொபைலின் விலை ரூ.10,000-க்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IMC-2022 நிகழ்வில் இந்த லாவாவின் டிவைஸ் காட்சிப்படுத்தப்பட்டது, நிகழ்வில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பொதுமக்கள் முன் மொபைலை வெளிப்படுத்தினார். Lava Blaze 5G மொபைலானது MediaTek Dimensity 700 SoC ப்ராசஸரை கொண்டுள்ளது மற்றும் 4GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த மொபைல் 3GB விர்ச்சுவல் ரேம் ஆப்ஷனையும் பெறுகிறது. மேலும் இது 128GB இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. Blaze 5G மொபைல் ஆண்ட்ராய்டு 12-ல் இயங்குகிறது. Blaze 5G மொபைல் 50MP மெயின்லென்ஸ் மற்றும் 2MP VGA சென்சார் கொண்டுள்ளது.

Also Read : உங்கள் ஃபோனில் 5ஜி சேவையை பயன்படுத்த விரும்புகிறீர்களா.? - எப்படி வேலை செய்யும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.!

இது 8MP முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. Blaze 5G-ல் 5,000mAh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. Widevine L1 சப்போர்ட்டுடன் 90 Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் 6.5 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த மொபைல் சைட் மவுண்ட்டட் அலட்ரா-ஃபாஸ்ட் ஃபிங்கர்பிரின்ட் அன்லாக் கொண்ட லேட்டஸ்ட் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. Blaze 5G-ன் மற்ற சிறப்பம்சங்களில் USB-C போர்ட், ப்ளூடூத் 5.1, 2 சிம் கார்டுகளுக்கான ஸ்லாட் மற்றும் டூயல் VoLTE ஆகியவை அடங்கும். இந்த மொபைல் நீலம் மற்றும் பச்சை கலர் ஆப்ஷன்களில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொபைல் வாரன்டி பீரியட்டின் கீழ் இருக்கும் வரை தனது வாடிக்கையாளர்களுக்கு ஃப்ரீ டோர்ஸ்டெப் டெலிவரி சர்விஸ் வழங்கப்படும் என்றும் லாவா நிறுவனம் கூறி இருக்கிறது.

Published by:Selvi M
First published:

Tags: Smartphone, Technology