• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Lava நிறுவனத்தின் முதல் 5G ஸ்மார்ட் ஃபோன் Agni 5G அறிமுகம் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Lava நிறுவனத்தின் முதல் 5G ஸ்மார்ட் ஃபோன் Agni 5G அறிமுகம் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

 5G ஸ்மார்ட் ஃபோன் அறிமுகம்

5G ஸ்மார்ட் ஃபோன் அறிமுகம்

Lava Agni 5G launch in India : இந்திய ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பாளரான லாவா இன்டர்நேஷனல் நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட் ஃபோனான, லாவா அக்னி 5ஜி-யை (Lava Agni 5G) நாட்டில் இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது.

  • Share this:
தனது முதல் 5G- எனேபிள்ட் ஸ்மார்ட் ஃபோனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது லாவா நிறுவனம். இந்திய ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பாளரான லாவா இன்டர்நேஷனல் நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட் ஃபோனான, லாவா அக்னி 5ஜி-யை (Lava Agni 5G) நாட்டில் இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது. Lava Agni 5g ஸ்மார்ட் ஃபோன் சமீபத்திய 5G டெக்னலாஜி மற்றும் மீடியாடெக் டைம்ஸ்னிட்டி (MediaTek Dimesnity) ப்ராசஸருடன் வருகிறது.

கவர்ச்சிகரமான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஃபோன் பல ஈர்க்க கூடிய அம்சங்களுடன் வருகிறது. தங்கள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஃபோன் அறிமுகம் குறித்து பேசியுள்ள லாவா இன்டர்நேஷனல் லிமிடெட் தலைவர் மற்றும் வணிகத் தலைவரான சுனில் ரெய்னா, "இந்த ஃபோன் இந்தியாவின் fire power.

தொழில்நுட்ப துறையில் இந்தியாவும் இந்தியர்களும் எதையும் சாதிக்க முடியும் என்பதை இந்த Lava Agni 5G பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.



இந்த சிறந்த ஸ்மார்ட் ஃபோன் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. அடுத்த தொழில்நுட்ப வல்லரசாக இந்தியாவை பார்க்க வேண்டும் என்று கனவு கண்டு வரும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் இந்த ஸ்மார்ட் ஃபோன் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது" என்று பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

ALSO READ |  உங்கள் போனில் இருந்தே பிடிஎஃப்-யில் கையெழுத்து போடலாம் - இதோ அதற்கான வழி!

Lava Agni 5G மொபைலின் சிறப்பம்சங்கள் :

நானோ டூயல் சிம் ஸ்லாட்டை கொண்டுள்ள Lava Agni 5G ஸ்மார்ட் ஃபோன் ஆண்ட்ராய்டு 11-ல் இயங்குகிறது. 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் ஹோல்-பஞ்ச் டிஸைனுடன் 6.78-இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 SoC ப்ராசஸர் இடம் பெற்றுள்ளது. 8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் இது பாதுகாப்பு பெற்றுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை, Lava Agni 5G-யின் பின்புறத்தில் குவாட் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுளது.



இதன் பின்பக்கத்தில் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவை அடங்கும். முன்பக்கம் செல்ஃபி மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக 16 மெகாபிக்சல் இருக்கிறது.

ALSO READ |  மொபைல், லேப்டாப் உள்ளிட்ட டிவைஸ்களை முறையாக கிருமி நீக்கம் செய்வது எப்படி?

இந்த ஸ்மார்ட் ஃபோனில் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் 5000mAh லித்தியம் பாலிமர் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5G, 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS மற்றும் USB Type-C Port உள்ளிட்டவை அடங்கும். மேலும் இந்த ஃபோன் சைட் மவுண்ட்டட் ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சாருடன் வருகிறது.

விலை விவரங்கள்..

இந்தியாவில் Lava Agni 5G-யின் 8GB ரேம் + 128GB இண்டர்ன ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.19,999 ஆகும். ஆனால் முன்கூட்டியே வாங்குபவர்களுக்கு ரூ.2000 சிறப்பு தள்ளுபடியை லாவா நிறுவனம் வழங்குகிறது, எனவே இதன் விலை தற்போது ரூ.17,999-ஆக குறைக்கப்பட்டுள்ளது.



இந்த ஃபோன் வரும் நவம்பர் 18 முதல், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ரீட்டெயிலர்ஸ் மூலம் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று முதலே அமேசான் மற்றும் லாவா இ-ஸ்டோர் மூலம் இந்த Lava Agni 5G-யை ரூ.500 செலுத்தி ப்ரீ புக்கிங் செய்யலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: